இரவு 11 மணி:
விஷ்வனாதன் அன்று பரபரப்பாக தன் குடும்பத்தினரை வேலை வாங்கிக் கொண்டு இருந்தார்.
"லாவன்யா,ஐஷ்வரியா சீக்கிரம் செய்யுங்க மா.நமக்கு நேரம் குறைவா தான் இருக்கு",என்றார்
"இப்போ முடிசுரும் அப்பா.கவலை படாதீங்க",என்றாள் லாவன்யா.
"தம்பி எனக்கு எதாவது வேலை இருக்குதா பா",என்று மெதுவாக கேட்டார் விஷ்வனாதனுடைய அம்மா.
"அம்மா நீங்க பேசாம உக்கார்ந்து வேடிக்கை பாருங்க",என்றார் விஷ்வனாதன்.
விஷ்வனாதன் ஒரு பெரிய கம்பனியில் மேனேஜராக வேலை செய்கிறார்.குறைவில்லா செல்வமும் நிறைவான மூன்று மகள்களையும் கொடுத்த கடவுள் அவருடைய மனைவியை வெகு சீக்கிரம் பரித்துக் கொண்டார்.
விஷ்வனாதன் தன் அம்மாவின் உதவியுடன் தன் மகள்களை வளர்த்து ஆள் ஆக்கினார்.முதல் மகள் ஆர்த்தி கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டு இருந்தாள்.
முதல் மகள் என்பதால் அப்பாவும் பாட்டியும் ஆர்த்திக்கு அதிக செல்லம் கொடுத்தார்கள்.ஆர்த்தி அன்பானவள்,அமைதியானவள்.அழகில் பேரழகி என்றே சொல்லலாம்.எதை செய்தாலும் நன்கு யோசித்து செய்யும் பக்குவம் கொண்டவள். இரண்டாவது மகள் ஐஷ்வரியா.அவள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்தாள். ஐஷ்வரியா துடிப்பானவள்,தைரியமானவள்.எங்கு தப்பு நடந்தாலும் தட்டி கேட்கும் குணமுடையவள்.
மூன்றாவது மகள் லாவன்யா பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தாள். லாவன்யா வீட்டின் கடை குட்டி.எப்போதும் சிரிப்போடும் தன் வயதுக்கே உரிய குறும்போடும் இருப்பாள்.தன் இரு அக்காகள் மீது மிகுந்த பாசம் வைத்து இருந்தாள்.
அன்று ஆர்த்தியின் பிறந்த நாள் என்பதால் தங்கைகள் வீட்டை அலங்கரித்துக் கொண்டு இருந்தனர்.
"என்னம்மா முடிந்ததா இல்லையா",என்றார் அப்பா.
"முடித்துவிட்டோம் அப்பா",என்றாள் லாவன்யா.
YOU ARE READING
திருடிவிட்டாய் என்னை
Romanceதிருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜு...