ஆர்த்தி இரவு உணவை சமைத்துக் கொண்டு இருந்தாள்.ஆனந்த் தொலைகாட்சி பார்த்துக் கொண்டு இருந்தான்.அவன் விரலில் காயம் இன்னும் ஆறாததால் ஆர்த்தியே சமையல் வேலைகளை பார்த்துக் கொண்டாள்.சமையலை முடித்துவிட்டு வந்து பாயில் அமர்ந்தாள் ஆர்த்தி.ஆனந்த் அவளை பார்த்தான்.
"சமையல் முடிஞ்சுது.சாப்பிடரீங்களா",என்றாள்.
"இல்ல ஆர்த்தி கொஞ்ச நேரம் ஆகட்டும்",என்றான்.
"நான் உங்கள ஒன்னு கேட்கலாமா",என்றாள் தயக்கமாக.
அவன் அவளை ஒரு நொடி பார்த்துவிட்டு "சொல்லுங்க",என்றான்."ஏன் நீங்க இந்த திருட்டு வேலையை விட்டுட்டு வேற ஒரு நல்ல வேலைக்கு போகக் கூடாது.",என்றாள்.அவன் பெரு மூச்சு விட்டான்.
"இந்த தொழில் "ஒரு வழி" பாதை ஆர்த்தி.ஒரு தடவை நுழைந்து விட்டால் திரும்ப வரவே முடியாது",என்றான் சோகமாக.
"எத்தனையோ பேர் திருந்தி வாழரது இல்லையா",என்றாள் அவள்.
"எனக்கும் அப்படி வாழ ஆசை தான் ஆனால் இனிமேல் யாரும் என்னை நம்பி வேலை தர மாட்டார்கள்.இனி சாகும் வரை என்னை திருடனாக தான் பார்ப்பார்கள்",என்றான்.
"நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் வாழ்க்கை கண்டிப்பாக மாறும்",என்றாள்.
"என்ன சொல்ல வரீங்க.புரியலையே",என்றான்.
"இனிமேல் நீங்கள் திருட கூடாது.ஒரு ரூபாயாக இருந்தாலும் நேர்மையாக தான் சம்பாதிக்கனும்.இதை நீங்க கடை பிடித்தால்.உங்க வாழ்க்கை கண்டிப்பாக மாறும்.",என்றாள்.ஆனந்த் அவளை சங்கடமாக பார்த்தான்.
"நீங்க பல பேருக்கு உதவி செய்யரீங்க.அதுக்கு நிறைய பணம் தேவை.ஆனால் அந்த உதவியை நேர்மையாக செய்தால் அவர்கள் கண்டிப்பாக சந்தோசமாக ஏற்றுக் கொள்வார்கள்.",என்றாள்.அவன் மீண்டும் யோசித்தான்.
"எனக்காக இதை செய்ய மாட்டீங்களா",என்றாள் கெஞ்சலாக.
அவன் அவளை ஆச்சர்யமாக பார்த்தான்.அவள் அழகாய் அவனை பார்த்து புன்னகைத்துக் கொண்டு இருந்தாள்.அதில் அவன் கரைந்து போனான்.அவளை தன்னவள் ஆக்கிக் கொள்ள மனம் துடித்தாலும் அதற்கு தகுதியானவன் அவன் இல்லை என்று புத்தி நினைவு ஊட்டியது.எனினும் அவளோடு இருக்கும் இந்த நாட்களே போதும் என்று அவன் எண்ணினான்.
அவளை பார்த்து சிரித்துக் கொண்டே"இனி திருட மாட்டேன்",என்றான்.
"சரி வாங்க சாப்பிடலாம்",என்று கூறி அவள் உணவை எடுத்து வைக்க சென்றாள்.ஆனந்த் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
அர்ஜுன் கோவமாக வெளியே வந்து காரில் ஏறினான்.ஐஷ்வர்யா அவனை பின் தொடர்ந்தாள்.
"என்ன அர்ஜுன் திரும்ப ஆரம்பத்துக்கே வந்துட்டோம்.ஆஸ்பத்திரில இருந்து அக்கா எங்கே போயிருப்பா நு தெரியலையே",என்றாள் வருத்தமாக.அர்ஜுன் பெரு மூச்சு விட்டான்.
"இனியும் தாமதிக்க கூடாது.நம்ம தாமதிக்குர ஒவ்வொறு நொடியும் ஆர்த்திக்கு ஆபத்து தான்.போஸீசுக்கு போயிருவோம்",என்றான்.ஐஷ்வர்யா அதிர்ச்சி அடைந்தாள்.
"ஆனா அப்பா ஒத்துக்க மாட்டாரே",என்றாள்.
"அவரை சமாளிப்பது பெரிது இல்லை.எனக்கு என் ஆர்த்தி தான் முக்கியம்",என்றான்.ஆர்த்தியை அவன் உரிமையாக அழைத்தது ஐஷ்வர்யாவின் மனதில் ஒரு வித வலியை ஏற்படுத்தியது.அதன் பின் அவள் எதுவும் பேசவில்லை.மௌனமாக பயணம் செய்தாள்.
"சரி நடந்ததை எதுவும் வீட்டில் சொல்லாதே.நான் உன்னை நாளைக்கு சந்திக்குறேன்.காலையில் போலீஸ் ஸ்டாஷன் போகனும்.கிளம்பி இரு",என்றான் அர்ஜுன்.ஐஷ்வர்யா மௌனமாக தலையை மட்டும் ஆட்டி
விட்டு இறங்கிக் கொண்டாள்.

YOU ARE READING
திருடிவிட்டாய் என்னை
Romanceதிருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜு...