"என்ன டீ அக்கா எப்போதும் 6 கே முழிச்சுரும் ஆனா 9 ஆகுது இன்னும் கிழே இறங்கவே இல்லை",என்றாள் ஐஷ்வர்யா.
"இரவு ரொம்ப நேரம் முழிச்சதுனால தூங்கிட்டு இருப்பாங்க.வா நம்ப போய் எழுப்பலாம்",என்றாள் லாவன்யா.
இருவரும் மேலே சென்றனர்."என்ன டீ கைல வச்சுருக்க",என்றாள் ஐஷ்வர்யா அவள் கையில் இருக்கும் பரிசை பார்த்து.
"இது அக்காவுக்கு என் பரிசு ",என்றாள் லாவன்யா.
"யேய் மொக்கையா எதாவது வச்சு இருந்த பாரு",என்றாள் ஐஷ்வர்யா.
"இதுல நம்ப மூனு பேரும் இருக்கர புகைப்படம் வச்சு இருக்கேன்.இப்போ சொல்லு என் பரிசு மொக்கையா",என்றாள் லாவன்யா பாவமாக.ஐஷ்வர்யா ஒரு நொடி அவளை நெகிழ்ச்சியாக பார்த்து விட்டு திரும்பினாள்.ஆர்த்தியின் அறை கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றனர்.அங்கே அவள் இல்லை.ஒரு வேலை குளியல் அறையில் இருப்பாள் என்று நினைத்து பார்த்தனர்.அங்கேயும் இல்லாததால் குழப்பம் அடைந்தனர்.
"ஒரு வேலை அக்கா காலையில் சீக்கிரமாக கோவிலுக்கு போயிட்டாங்களோ",என்றாள் லாவன்யா யோசனையாக.
"இருக்கலாம் வா கீழே போய் பாட்டிகிட்ட கேட்கலாம்",என்றாள் ஐஷ்வர்யா.
"என்ன பாட்டி வாசனை தூக்குது.என்ன செய்யரீங்க",என்று கேட்டபடியே சமையல் அறைக்குள் புகுந்தாள் லாவன்யா.
"கேசரி செய்யுரேன் மா.அர்த்திக்கு ரொம்ப புடிகும்ல .அது மட்டும் இல்ல.இன்னைக்கு எல்லாமே ஆர்த்திக்கு பிடித்தது தான்.",என்றார் பாட்டி மகிழ்ச்சியாக.
"ஆமாம் ஆர்த்தி என்றாலே உங்களுக்கு தனி பிரியம் தான்.எங்களுக்கு எல்லாம் இப்படி செய்வீங்களா",என்றாள் லாவன்யா.
"போடி சும்மா விளையாடிகிட்டு.எனக்கு நிறைய வேலை இருக்கு.உன்கூட பேசிகிட்டு இருக்க நேரம் இல்லை",என்றார் பாட்டி.
"சரி சரி போரேன்.ஆமா பாட்டி அக்கா எங்கேயாவது வெளியே போனாங்களா",என்றாள்.
YOU ARE READING
திருடிவிட்டாய் என்னை
Romanceதிருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜு...