14.

3.5K 141 3
                                    

ஐஷ்வர்யா தன் பீரோவில் எதையோ தீவிரமாக தேடிக் கொண்டு இருந்தாள்.லாவன்யா அப்போது உள்ளே நுழைந்தாள்.

"அக்கா என் நகை எதுவுமே பீரோவில் காணோம்.எங்கே போச்சுனு தெரியலை.",என்றாள் பதட்டமாக.ஐஷ்வர்யா திடுகிட்டாள்.

"என்னோட நகையும் காணோம் டீ.அதை தான் தேடிகிட்டு இருக்கேன்.",என்றாள் ஐஷ்வ‌ர்யா.

"எங்க அக்கா போயிருக்கும்",என்றாள் லாவன்யா பயத்துடன்.

"நல்லா நியாபகம் இருக்கு டீ.போன வாரம் கூட ஒரு விஷேஷத்துக்கு போடுட்டு போனேன்.",என்றாள் யோசனையாக.திடீர் என்று அவள் கண்கள் பயத்தில் விரிந்தன.அக்கா பிறந்தநாள் அன்னிக்கு காலையில் என் பீரோ துறந்து இருந்தது.முழிச்சு வெளியே வந்தப்போ மொட்டை மாடி கதவு திறந்து இருந்தது.நான் அக்கா தான் யோகா செய்ய போயிருப்பானு விட்டுட்டேன். ஆனா அன்னிக்கு அக்கா வீட்லயே இல்லை.அப்படீனா நகை பணத்தை திருட வந்தவன் அக்காவை எதாவது.....",என்று நிறுத்தி ஐஷ்வர்யா லாவன்யாவை பார்த்தாள்.அவள் முகம் பயத்தில் சிவந்து போனது.
அதற்குமேல் அவர்களால் என்ன நடந்து இருக்கும் என்று யோசிக்க முடியவில்லை.உடனே அப்பாவிடம் சொல்ல கீழே ஓடினார்கள்.

       முத்து வீடு திரும்ப இன்னும் நான்கு ஐந்து நாட்கள் ஆகலாம் என்று கைபேசி மூலம் ஆனந்திடம் தெரிவித்து இருந்தான்.தனியாக பொழுதை கழிக்க சங்கடமாக இருந்தது ஆனந்துக்கு.
கடற்கரைக்கு சென்று சிறிது நேரம் உலாவலாம் என்று முடிவு செய்தான்.பாட்டியின் வீட்டை தான்டும் போது ஆர்த்தியை பார்க்க வேண்டும் என்று ஆசை தூண்டியது எனினும் அவளுக்கு தன்னோடு பேசக் கூட விருப்பம் இல்லாத நிலையில் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தான்.பாட்டியின் வீட்டை கடந்த போது பாட்டி வெளியே வந்தார்.

"என்ன தம்பி எங்கே கிளம்பீட்ட",என்றார்.

"சும்மா கடலை பார்த்துட்டு வரலாம் நு போரேன் பாட்டி",என்றான்.

"ஏன் பா.வந்ததுல இருந்து அந்த பொன்னு வீட்டிலேயே அடஞ்சு கிடக்கு.அதையும் கூடீட்டு போலாம்ல பா",என்றார்.
ஆனந்த் பெரு மூச்சு விட்டான்.

திருடிவிட்டாய் என்னைWhere stories live. Discover now