ஆர்த்தி நன்கு உறங்கிக் கொண்டு இருந்தாள்.திடீர் என்று அவளுக்கு இருமல் வந்தது.அறையில் தண்ணீர் இல்லாததால் கதவை திறந்து வெளியே வந்தாள்.ஆனால் ஆனந்த் அங்கே இல்லை.சமையல் அறைக்கு சென்று தண்ணீர் எடுத்து குடித்தாள்.வீட்டில் ஆனந்த் இருப்பதாக தெரியவில்லை.எங்கே போனான் என்று யோசித்துக் கொண்டே வெளி கதவி திறக்க முயற்சி செய்தாள்.ஆனால் அது வெளி பக்கமாக பூட்டி இருந்தது.ஒரு வித பயமும் குழப்பமும் அவளை ஆக்கிரமித்துக் கொண்டது.
அப்போது மணி 3.00.அமைதியாக சென்று பாயில் அமர்ந்து அவனுக்காக காத்திருக்க துவங்கினாள்.சிறிது நேரம் கழித்து அவள் அங்கேயே உறங்கிவிட்டாள்.ஏதோ சத்தம் கேட்டு விழித்தாள் ஆர்த்தி.மணி அப்போது அதிகாலை 4.30.ஆனந்த் பரபரப்பாக உள்ளே நுழைந்தான்.கதவை தாழிட்டுவிட்டு திரும்பினான்.ஆர்த்தியை பார்த்து திடுகிட்டான்.ஆர்த்தி அவனை குழப்பமாய் பார்த்துக் கொண்டு இருந்தாள்.பதட்டமாக அறைக்குள் செல்ல முயற்சி செய்த போது
அவன் சட்டையில் இருந்து பணமும் நகையும் விழுந்தது.ஆர்த்தி அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.அவன் வேகமாக அதை எடுத்துக் கொண்டு அவன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தினான்.அவளால் அதன் பின் தூங்க முடியவில்லை.யார் இவன்.என்ன வேலை செய்கிறான்.நல்லவனா கெட்டவனா என்று எதுவும் தெரியாமல் இவன் பின்னால் வந்தாள்.ஆனால் இப்போது அவளுக்கு ஒரு நடுக்கம் ஏற்பட்டது.எங்கேயோ இரவில் செல்கிறான்.வரும்போது நகை பணத்துடன் வருகிறான்.
ஒரு வேலை திருடனாக இருப்பானோ என்று எண்ணும் போதே அவள் மனம் பதறியது.வெகு நேரம் ஆகியும் அவன் வெளியில் வராததால் அவள் குளிக்க சென்றாள்.அவன் வாங்கி தந்த சுடிதாரை அணிந்து வெளியே வந்த போது மணி 9 ஆகிவிட்டது.அவன் எங்கேயோ அவசரமாக கிளம்பிக் கொண்டு இருந்தான்.அவன் செய்கை அவளுக்கு குழப்பமாகவே இருந்தது.
"கொஞ்சம் வேலை இருக்கு.நான் போயிட்டு வந்து விடுகிறேன்.நீ கதவை பூட்டிக் கொண்டு பத்திரமாக இரு",என்று கூறி அவன் வெளியே சென்றான்.
அவன் சென்ற பிறகு அவள் கதவை பூட்டி விட்டு டிபன் செய்ய சமையல் அறைக்குள் சென்றாள்.அவள் சிந்தனை அவள் வீட்டை நோக்கி சென்றது.தங்கைகளை பற்றியும் அப்பா பாட்டியை பற்றியும் நினைத்துப் பார்த்தாள்.இவனிடம் வந்து தஞ்சம் அடைந்தது பெரிய தப்பாக இருக்குமோ.மறுபடியும் தன் வீட்டுக்கே சென்று விடலாமா என்று யோசித்தாள்.அப்பாவிடம் நடந்ததை கூறி இதில் தன் தப்பு எதுவும் இல்லை என்று விளக்கினால் அவர் கோவப் படாமல் தன்னை ஏற்றுக் கொள்வார் என்று நினைத்தாள்.
அவள் டிபன் செய்து முடிக்கும் போது ஆனந்த் உள்ளே நுழைந்தான்.அவள் சமையல் அறையில் இருந்து எட்டி பார்த்தாள்.அவன் கையில் இருந்த பையில் இருந்து ஒரு பண கட்டை எடுத்து டிராவில் வைத்தான்.ஆனந்த் திரும்பிய போது ஆர்த்தி அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
"என்ன ஆர்த்தி டிபன் ரெடியா ",என்றான் ஆனந்த் இயல்பாக.
அவள் அவனை பார்த்து முறைத்துக் கொண்டே "நீ திருடனா",என்றாள்.
ஆனந்த் அதிர்ச்சி அடைந்தான்.அவள் அவனிடம் பேசமாட்டாளா என்று ஏங்கி கொண்டு இருந்த அவனுக்கு
அவள் பேசிய முதல் வார்த்தை வேதனையை தந்தது.அவளுக்கு பதில் எதுவும் சொல்ல முடியாமல் தவித்தான்.அப்போது வாசலில் யாரோ அழைத்ததை போல சத்தம் கேட்டது.ஒரு முதியவர் உள்ளே நுழைந்தார்."வாங்க அய்யா.நானே வந்து குடுக்கலாம்நு இருந்தேன் அதுகுள்ள நீங்களே வந்துட்டீங்க.இந்தாங்க அய்யா இந்த மாசம் பாப்பாவோட ஃபீஸ் கட்ட இதை
வச்சுக்கோங்க ",என்று கூறி டிராவில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்தான்."இந்த பணத்தில் படித்தால் உங்கள் பிள்ளை எப்படி வாழ்வில் உயர முடியும்",என்றாள் ஆர்த்தி அந்த முதியவரை பார்த்து.அவர் குழப்பமாய் அவளை பார்த்தார்.
"இது திருட்டு பணம்.இதில் உங்கள் பிள்ளையை படிக்க வைத்தால் பல பேரின் சாபம் உங்கள் பிள்ளைக்கு வரும்",என்றாள்.அவர் திடுகிட்டார்.பின் ஆனந்தை பார்த்தார்.அவன் மறுக்காமல் அமைதியாக இருந்தான்.அந்த முதியவர் எதுவும் பேசாமல் அங்கு இருந்து கிளம்பினார்.ஆனந்த் அவர் அருகில் சென்று அவரை தடுத்தான்.
"அய்யா இருங்க இந்த பணத்தை வாங்கிக்கோங்க",என்று கூறி அவர் கையில் பணத்தை திணித்தான்.
"அந்த பொன்னு சொன்னது உண்மை இல்லை என்று சொல்லுங்க தம்பி.அப்போ இந்த பணத்தை வாங்கிக்குறேன்",என்றார்.
அவன் எதுவும் பேசாமல் நிற்க.அவர் வேதனையாக கிளம்பி சென்றார்.
YOU ARE READING
திருடிவிட்டாய் என்னை
Romanceதிருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜு...