ஆனந்த் கோவமாக ஆர்த்தியை பார்த்தான்.
"இப்போது உனக்கு சந்தோசமா.உண்மையை சொல்லி ஒரு சின்ன பொன்னோட படிப்பை கெடுத்துவிட்டாய்.என்னை தவிற யாரும் அந்த முதியவருக்கு பண உதவி செய்ய மாட்டார்கள்.இனி அந்த பொன்னு எப்படி படிக்கும்",என்றான் வேதனையாக.
"உன் திருட்டு பணத்தில் படிப்பதை விட அந்த பொன்னு வீட்டில் இருக்கலாம்.எத்தனை பேரோட சாபத்தை வாங்கி இருப்பாய்.உன்னோடு இத்தனை நாட்கள் இருந்தேன் என்று நினைக்கும் போது எனக்கு அறுவருப்பாக இருக்கிறது.
",என்றாள் கோவமாக."ஆம் நான் திருடன் தான்.திருடிய பணத்தில் தான் அனைவருக்கும் உதவுகிறேன்.நீ இப்போது உடுத்தி இருக்கும் உடை சாப்பிடும் சாப்பாடு எல்லாமே திருட்டு பணத்தில் வாங்கியது தான்.நீ யாரும் இல்லாமல் நின்ற போது உன்னை காப்பாற்றி பாதுகாப்பு குடுத்தது இந்த திருடன் தான்.இப்போது என்ன செய்ய போகிறாய்.இங்கு இருக்க இஷ்டம் இல்லை என்றால் நீ தாராலமாக உன் வழியில் சென்று விடலாம்.நான் தடுக்க மாட்டேன்",என்று ஆவேசமாக கத்தி விட்டு வெளியே சென்றான் ஆனந்த்.
வேகமாக நடந்து கடற்கரைக்கு சென்றான் ஆனந்த்.அங்கு அலை மோதும் கரை அருகில் சென்று அமர்ந்தான்.கோவத்தில் கொதித்துக் கொண்டு இருந்த அவன் மனம் குளிர்ந்த கடல் நீர் காலில் பட்டவுடன் சட்டென்று சாந்தம் அடைந்தது.பொறுமையாக தாம் பேசியதை மறுபடியும் ஒரு முறை நினைத்துப் பார்த்தான்.
"ச்ச எவ்வளவு மோசமாக நான் அவளை பேசிவிட்டேன்.செய்த உதவியை சொல்லிக் காட்டிவிட்டேனே.நான் விரும்பும் பெண்ணை வார்த்தைகளால் காயபடுத்திவிட்டேனே
ஆறுதலாக இருக்க வேண்டிய நானே இப்படி கோவப்பட்டு விட்டேனே",என்று எண்ணி வருந்தினான்.உடனே வீட்டுக்கு சென்று அவளிடம் மன்னிப்பு கேட்க அங்கு இருந்து கிளம்பினான்.கதவை தட்டினான் ஆனால் அவள் வரவில்லை.கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றான்.ஆர்த்தி தென்படவில்லை.எல்லா அறைகளிலும் சென்று பார்த்தான் ஆனால் அவள் அங்கு இல்லை.அவள் அங்கு இருந்து சென்று விட்டாள் என்ற உண்மை அவனை திடீர் என்று தாக்க தன் தலையில் கையை வைத்து
சுவர் ஓரமாக இடிந்து போய் அமர்ந்தான்.
YOU ARE READING
திருடிவிட்டாய் என்னை
Romanceதிருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜு...