ஆனந்த் பூட்டி இருந்த தனது வீட்டை திறந்தான்.ஆர்த்தி தயக்கமாக வெளியே நின்று கொண்டு இருந்தாள்
"உள்ளே வாங்க ஆர்த்தி",என்றான் ஆனந்த்.ஆர்த்தி சற்று ஆச்சர்யமாக அவனை பார்த்தாள்.மெதுவாக உள்ளே நுழைந்தாள்.வீட்டை சுற்றி பார்த்தாள்.ஒரு சமையல் அறையும்,ஒரு வரவேற்பறையும் ஒரு படுக்கை அறையும் இருந்தது.வீடு சுத்தமாக இருந்தது.அவள் தயக்கமாக நின்று கொண்டு இருந்தாள்.ஆனந்த் அவளுக்கு குடிக்க மோர் கொண்டு வந்தான்.
அதை மறுக்காமல் வங்கிக் கொண்டாள் ஆர்த்தி.மணி அப்போது 7 ஆகிவிட்டது.ஆனந்த் தொலைகாட்சியை ஆன் செய்தான்."நீங்க டி.வி பார்த்துகிட்டு இருங்க.நான் உங்களுக்கு டிபன் ரெடி பன்னுரேன்",என்றான்.
அவள் அமைதியாக பாயில் அமர்ந்தாள்.அவன் அவளை ஒரு நொடி பார்த்துவிட்டு உள்ளே சென்றான்."எதுவும் பேசாமல் இப்படி என்னை வேதனை படுத்துகிறாளே.உண்மை தெரிய வரும் போது இன்னும் என்ன செய்வாளோ",என்று நினைக்கும் போதே அவன் மனம் பதறியது.
காய் வெட்டிக் கொண்டு இருந்த அவன் பல சிந்தனைகளில் மூழ்கினான்.ரவியை பற்றி யோசித்தான்.பின் முத்து இந்த பெண்ணை இங்கே தங்க வைத்தது தெரிந்தால் என்ன சொல்லுவானோ என்று யோசித்தான்.யோசனையில் மூழ்கிய அவன் கை தவறி காய் வெட்டும் போது தன் விரலை வெட்டிக் கொண்டான்.
"ஆஆஆ",என்று கத்தினான்.ஆர்த்தி சமையல் அறைக்குள் இவன் குரல் கேட்டு ஓடி வந்தாள்.அவன் எழுந்து சென்று அவன் கையை தண்ணீரில் காட்டினான்.
ஆழமான காயம் என்பதால் இரத்தம் நிக்கவே இல்லை.அவன் ஆர்த்தியை
தான்டி அவன் அறைக்குள் சென்றான்.பரபரப்பாக பேன்டேடை தேடினான்.அதை பிரித்து தன் விரலில் ஒட்டிக் கொண்டான்.இப்போது இரத்த கசிவு கொஞ்சம் நின்றது ஆனாலும் அந்த காயம் மிகவும் வலித்தது.அவன் சமையல் அறைக்குள் நுழைந்தான்.ஆர்த்தி அங்கே காய்களை எல்லாம் வெட்டி முடித்து ஏதோ சமைத்துக் கொண்டு இருந்தாள்.அமைதியாக சென்று பாயில் அமர்ந்தான்.அரை மணி நேரம் கழித்து ஆர்த்தி இரண்டு தட்டுக்களோடு வெளியே வந்தாள்.ஒன்றை அவன் முன் வைத்தாள்.இட்டிலியும் அதற்கு தொட்டுக்க சாம்பாரும் செய்து இருந்தாள்.அவனிடம் இருந்து சிறிது தூரம் தள்ளி அவள் அமர்ந்து உண்ண துவங்கினாள்.அவன் அமைதியாக சாப்பிட்டான்.மிகவும் சுவையாக சமைத்து இருந்தாள்.இருவரும் சாப்பிட்ட பிறகு தட்டுக்களை கொண்டு போயி கழுவி வைத்தாள்.ஆனந்த் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.அருமையான பெண்.இவளை மனைவியாக அடைய போகிறவன் அதிஷ்டசாலி என்று நினைத்துக் கொண்டான்.
"நீங்க ரொம்ப நல்லா சமையல் செய்யரீங்க",என்றான்.அவள் எதுவும் பேசவில்லை.அவன் படுக்கை அறையை அவளுக்காக தயார் செய்தான்.
"நீங்க உள்ளே படுத்துக்கோங்க.கதவை வேண்டும் என்றால் சாத்திக்கோங்க",என்றான்.
அவள் உள்ளே சென்று கதவை சாத்தினாள்.அவள் ஆடைகள் எல்லாம் பாட்டி வீட்டில் மாட்டிக் கொண்டன.புடவையில் இருப்பது அவளுக்கு சங்கடமாக இருந்தது.மெதுவாக அவள் அணிந்து இருந்த பூவையும் வலையலையும் கழற்றினாள்.அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.கதவை ஒரு பயத்தோடு திறந்தாள்.என்ன தான் ஆனந்த் அவளுக்கு அடைகளம் குடுத்து உதவினாலும் அவனும் ஒரு ஆண் தானே.அவனை முழுதாக எப்படி நம்புவது என்ற தயக்கம் அவளுக்கு இருந்தது.இப்போது அவள் அவன் வீட்டில் இருக்கிறாள்.வீட்டில் யாரும் இல்லை.இந்த நேரத்தில் ஏன் இவன் கதவை தட்டிகிறான் என்று பதட்டம் ஆனாள்.மெதுவாக கதவை திறந்தாள்.அவன் ஒரு பையை அவளிடம் கொடுத்துவிட்டு பாயில் படுக்க சென்றான்.
உள்ளே சென்று மீண்டும் கதவை சாத்தினாள்.பையில் என்ன இருக்கு என்று பார்த்தாள்.பார்த்தவுடன் ஆர்சர்யத்தில் புருவத்தை உயர்த்தினாள்.உள்ளே ஒரு நைட்டியும் ஒரு சுடிதாரும் இருந்தது.நைட்டியை வெளியே எடுத்து போட்டுக் கொண்டாள்.அவளை அறியாமல் அவள் இதழ்கள் புன்னகைத்தன.
YOU ARE READING
திருடிவிட்டாய் என்னை
Romanceதிருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜு...