8.

4.1K 141 0
                                    

முத்து வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்தான்.ஆனந்த் ஒரு ஓரமாக உக்கந்து கொண்டு இருந்தான்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.ஆனந்த் எழுந்து கதவை திறந்தான்.அங்கே முத்துவின் சித்தப்பா நின்று கொண்டு இருந்தார்.

"வாங்க அய்யா",என்றான் ஆனந்த்.

"வாங்க சித்தப்பா.ஊர்ல எல்லோரும் நல்லா இருக்காங்கலா",என்றான் முத்து.

"எல்லாரும் நல்லா இருக்காங்க பா.நீ எப்படி இருக்க.என்னப்பா இப்படி எழச்சுட்ட",என்றார் வருத்தமாக.

"அதல்லாம் ஒன்னும் இல்லை சித்தப்பா.ஆமா என்ன திடீர்னு வந்திர்க்கீங்க.எதாவது முக்கியமான விஷயமா.அம்மாவுக்கு ஒன்னும் இல்லையே",என்றான் பதட்டமாக.

"அம்மா நல்லா இருக்கு பா.ஒரு முக்கியமான விஷயம் பேச தான் வந்தேன்",என்று கூறி தன் பையில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து காட்டினார்.

"அம்மா உனக்கு இந்த பொன்ன பார்திர்க்கு பா.புடிச்சிர்க்கானு பார்த்து சொல்லு",என்றார் அவர்.

"எனக்கு எதுக்கு சித்தப்பா இப்போ கல்யாணம் எல்லாம்",என்றான் முத்து வெட்கத்துடன்.

"ஆமா பா உனக்கும் வயசு ஆகீட்டே போகுது இல்ல.கால காலத்துல உன் வேலைய முடிச்சா  அம்மாவுக்கு ஒரு கடமை முடியும்ல யா",என்றார் சித்தப்பா.

"அய்யா அண்ணே வாய் தான் வேண்டாம் நு சொல்லுது ஆனா கண்ணு புகைப்படத்தையே பார்க்குது",என்றான் ஆனந்த் சிரித்துக் கொண்டே.

"போ டா சும்மா.அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை",என்று கூறி வெட்கப்பட்டான் முத்து.

"சரி சரி இதை நீயே வெச்சு நாள் பூறாவும் பாரு.உன் அம்மாகிட்ட உனக்கு சம்மதம் நு சொலீர்ரேன்",

என்றார் சித்தப்பா.

"சரி சித்தப்பா எனக்கு நேரம் ஆகுது.நான் கிளம்புரேன்.நீங்க சாப்பிட்டு ஓய்வு எடுங்க நாளைக்கு ஊருக்கு போகலாம்.",என்றான் பாசமாக.

"இல்லப்பா எனக்கு ஊர்ல நிறைய வேலை இருக்கு .நான் இன்னிக்கு சாயங்காலமே கிளம்புரேன்",என்றார்.

திருடிவிட்டாய் என்னைWhere stories live. Discover now