ஆர்த்தி பாயில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருந்தாள். யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.எழுந்து சென்று கதவை திறந்தாள்.அங்கு முத்து நின்று கொண்டு இருந்தான்.ஆர்த்தியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தான்.இவள் எப்படி இங்கே அதுவும் ஆனந்த் தனியாக தங்கி இருக்கும் போது என்று எண்ணி கோவம் அடைந்தான்.ஆர்த்தி சங்கடமாக நின்று கொண்டு இருந்தாள்.மெதுவாக நகர்ந்து அவன் உள்ளே செல்ல வழி விட்டாள்.
முத்து உள்ளே சென்று கலைப்பாக பாயில் அமர்ந்தான்.ஆர்த்தி அவனுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்தாள்.அதை வாங்காமல் அவளை பார்த்து முறைத்தான்."நீ எப்படி இங்கே",என்றான் முத்து.அவள் நடந்ததை கூறினாள்.
"இப்படி தனியா ஒரு பையனோட தங்கி இருக்கிறாயே உனக்கு அறிவு இருக்கா.உன்னை பற்றி இந்த உலகம் என்ன சொல்லும் என்று யோசித்தாயா நீ",என்றான் முத்து.ஆர்த்தி மௌனமாக நின்றாள்.அப்போது ஆனந்த் உள்ளே நுழைந்தான்.
முத்துவை பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்தான்.பின் மகிழ்ச்சியில் அவனை கட்டி அனைத்தான்."என்ன அண்ணே 4 நாள் ஆகும் நு சொல்லீட்டு இப்படி திடீர் நு வந்திர்கீங்க",என்றான் ஆனந்த்.
"ஏன் டா நான் வந்தது உனக்கு எடஞ்சலா இருக்கா",என்றான் முத்து ஆர்த்தியை பார்த்துக் கொண்டே.ஆனந்த் வெட்கத்தில் சிரித்தான்.ஆர்த்தி சங்கடமாக தலையை குனிந்தாள்.
"அப்படி எல்லாம் இல்ல அண்ணே.ஆர்த்தி நீங்க கொஞ்சம் உள்ளே இருங்க.நான் பேசீட்டு கூப்படறேன்"என்றான் ஆனந்த்.அவள் அமைதியாக உள்ளே சென்றாள்.
"அண்ணே எங்களுக்குள்ள அப்படி எல்லாம் எதுவும் இல்லை.அந்த பொன்னு முன்னாடி அப்படி பேசாத அண்ணே.யாரும் இல்லாம வந்து இருக்கு.அது மனசு கஷ்ட படாம பாத்துக்கனும் அண்ணே",என்றான் ஆனந்த்.
"அந்த பொன்னு மனசுல ஒன்னும் இல்லை நு சொல்லு ஆன உன் மனசுல அந்த பொன்னு இல்லை நு சொல்லாத.உன்ன பத்தி எனக்கு தெரியாதா டா.எந்த பொன்னுக்கும் நீ இந்த அளவுக்கு உதவி செய்ததே இல்லை.என்ன டா லவ்வா",என்றான் சிரித்துக் கொண்டே.ஆனந்த் பெரு மூச்சு விட்டான்.
STAI LEGGENDO
திருடிவிட்டாய் என்னை
Storie d'amoreதிருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜு...