29.

3.5K 136 0
                                    

கமல் ரவியையும் ஆனந்தையும் விசாரித்துக் கொண்டு இருந்தார்.ரவி பேசும் போது சேட்டையும் மாட்டி விட்டான்.அனைவரையும் தனி தனியாக விசாரித்ததில் மூவரை பற்றியும் கமல் புரிந்து கொண்டார்.ஆனந்த் ஆர்த்தியை கடத்தவில்லை என்றாலும் நகையை திருடியதர்க்காக அவன் சிறையில் அடைக்கப் பட்டான்.ரவி மீது ஆள் கடத்தல் கேசும் விழுந்ததால் அவனுக்கு பல வருட தண்டனை கொடுக்கப் பட்டது.சேட்டின் கடைக்கு சீல் வைக்கப்பட்டு.திருட்டு நகை வாங்கி விற்ற குற்றத்தினால் சிறையில் அடைக்கப்பட்டார்.ரவியுடைய வெறி பல மடங்காக உயர்ந்தது.ஆனந்தை எதாவது செய்ய வேண்டும் என்று தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தான்.

          ரவி சிறையில் இருக்கும் போது ஒரு ரௌடி கும்பலோடு நட்பு கொண்டான்.

"அவன எதாவது பன்னனும் அண்ணே.அவன பத்தி நினைச்சாலே உடம்பெல்லாம் பத்திகிட்டு வருது.",என்றான் ரவி அந்த ரௌடி கும்பலில் ஒருவனிடம்.

"அட ஆள் யாருனு காட்டு அவனை முடிச்சிரலாம்",என்றான் ரௌடி சுருளி.

"அவன அவ்வளவு ஈஸியா சாகடிக்க கூடாது அண்ணே.துடிக்க வச்சு போடனும்.நல்ல ஒரு திட்டம் யோசிச்சு சொல்லுறேன்.அப்புறம் அவனை போடலாம்",என்றான் ரவி.

             அர்ஜுன் அன்று இரவு ஐஷ்வர்யாவோடு பேசிக் கொண்டு இருந்தான்.அவன் அம்மா அவனுக்கு பால் கொண்டு வந்தாள்.அவன் உடனே அழைப்பை துண்டித்தான்.

"எதுக்கு டா இப்போ கட் பன்னுன.யார் கூட பேசுவனு எனக்கு தெரியும் அப்புறம் என்ன",என்றார்.

"இல்லை அம்மா.இது வேற",என்றான் அர்ஜுன்.

"ஆர்த்தி கூட தான பேசிகிட்டு இருந்த",என்றார் அவன் அம்மா.

"இல்ல மா இது ஐஷ்வர்யா",என்றான் அர்ஜுன்.அவன் அம்மாவின் முகம் மாறியது.

"ஐஷ்வ‌ர்யாவோடு இந்த நேரத்தில் என்ன பேசுவாய்",என்றார் அவன் அம்மா.அர்ஜுனுக்கு சங்கடமாக இருந்தது.எப்படி சொல்லி புரிய வைப்பது.அக்காவை காதலிக்கிறேன் என்று சொல்லி விட்டு இப்போது இவளை காதலிக்கிறேன் என்று எப்படி சொல்வது என்று குழம்பிப் போய் இருந்தான்.

திருடிவிட்டாய் என்னைWhere stories live. Discover now