6.

4.4K 142 0
                                    

"என்ன டா.நேத்துல இருந்து ஒரு மாதிரி இருக்க.என்ன டா ஆச்சு",என்றான் முத்து ஆனந்தை பார்த்து.

"ஒன்னும் இல்லை அண்ணே.ஆமா இந்த ரவி எங்கே போனான் ஆளையே கானோம்",என்றான் ஆனந்த்.

"தெரியல டா.ஒரு வாட்டி வந்தான்.வந்த வேகத்தில் போயிட்டான்.நீ அப்போ தூங்கிகிட்டு இருந்த",என்றான் முத்து.

ஆனந்த் பெரு மூச்சு விட்டான்.

"நேத்து ராத்திரி எங்க டா போனீங்க இரண்டு பேரும்.தண்ணி குடிக்க முழிச்சப்போ நீங்க இல்லை",என்றான் முத்து.

ஆனந்த் எதுவும் பேசாமல் தலையை குனிந்தான்."நேத்து யாரோட குடிய கெடுத்தீங்க டா",என்றான் முத்து கோவமாக.

"அவன் கூட சேராதைனு நான் அப்போவே சொன்னேன்.எதுக்கு டா உனக்கு இந்த திருட்டு பொளப்பு.யாருக்காக பணம் சேர்க்குர இப்படி எல்லாரோட சாபத்தையும் வாங்கி",என்று கோவமாய் கத்தினான்.

அப்போது வாசலில் ஏதோ சத்தம் கேட்க இருவரும் திரும்பினார்கள்.

"தம்பி உள்ளே வரலமா",என்றார் ஒரு முதியவர்.

"வாங்க அய்யா உள்ளே வங்க",என்று ஆனந்த் அவரை உள்ளெ அழைத்தான்.

"தம்பி பாப்பா படிப்புக்கு பணம் கேட்டு இருந்தேனே.நாளைக்கு தான் பணம் கட்ட கடைசி நாள்",என்றார் தவிப்பாக.

"மன்னிச்சுகோங்க அய்யா.நேத்தே குடுக்கனும் என்று நினைத்தேன்.மறந்துவிட்டேன்",

என்று கூறி அவன் சட்டை பையிலிருந்து பணத்தை எடுத்து குடுத்தான்.முத்து இவர்களை அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவர் நன்றி கூறி விடைபெற்றுக் கொண்டார்.

ஆனந்த் முத்துவை பார்த்தான்."யாருக்காக மத்தவங்க சாபத்தை வாங்கி பணம் சேர்க்கிறேன் என்று கேட்டேல இவங்களுக்காக தான் அண்ணே",என்றான்.

முத்து எதுவும் பேசாமல் உள்ளே சென்றான்.

ஆனந்தின் சிந்தனை நேற்று நடந்ததை நோக்கி போனது.அந்த பெண் பத்திரமாக வீட்டுக்கு போய் இருப்பாளா என்பதை எண்ணி அவன் மனம் பதை பதைத்தது.

திருடிவிட்டாய் என்னைWhere stories live. Discover now