9.

3.8K 148 0
                                    

என்ன செய்வது.எப்படி இனி தனியாக வாழ்கையை நடத்துவது என்று தெரியாமல் நடந்து கொண்டு இருந்தான் ஆனந்த்.அவனை அறியாமல் அவன் கால்கள் தன் குப்பத்தின் அருகில் இருக்கும் கடற்கரைக்கு சென்றன.மெதுவாக சூரியன் மறைய ஆரம்பித்தது.கடற்கரை, மின் விளக்குகளின் வெளிச்சத்தால் ஒளி பெற்றது.அங்கு விளையாடிக் கொண்டு இருக்கும் குழந்தைகள்,சந்தோஷமாக பேசிக் கொண்டு இருக்கும் காதலர்கள்,நடை பயிற்சி செய்யும் முதியவர்கள் என வித விதமான
மக்கள் இருந்தார்கள்.இவர்களைப் போலவே தம்மோடும் கடற்கரையில் பேசி சிரிக்க ஒருவர் கூட இல்லையே என்று எண்ணும் போது அவ‌ன் மனம் கனத்தது.

        பல சிந்தனைகள் அவன் மனதை முற்றுகை இட்டன.முத்து அண்ணனுக்கு பல நாட்கள் கழித்து இப்போது தான் ஒரு நல்லது நடக்க போகிறது.அது தன்னால் கெட கூடாது.இதர்க்காக தான் இவன் வெளியே செல்ல போகிறான் என்று தெரிந்தால் முத்து அண்ணே கல்யாணமே வேண்டாம் என்று சொல்லி விடுவான்.அதனால் வேறு காரணம் தான் சொல்ல வேண்டும்.என்ன சொல்லுவது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டே நடந்து கொண்டு இருந்தான்.

         திடீர் என்று தூரத்தில் ஏதோ சத்தம் கேட்டது.மக்கள் ஓடினார்கள் .ஒரு இடத்தில் கூட்டம் கூடியது.என்ன ஆனது என்று பார்க்க ஆனந்தும் அந்த இடத்தை நோக்கி சென்றான்.ஒரு பெண்ணை இரண்டு பேர் தண்ணீரில் இருந்து தூக்கிக் கொண்டு வந்து கரையில் போட்டார்கள்.

"அம்மா, யாராவது வந்து இந்த பொன்னோட வயிற்றை அமுக்கி தண்ணீரை எடுங்கம்மா",என்றார் ஒருவர் கூட்டத்தில் இருக்கும் பெண்களை பார்த்து.உடனே இரண்டு பெண்கள் அந்த பெண் அருகே சென்று அவளை திருப்பி போட்டார்கள்.

        அவள் முகத்தை பார்த்தவுடன் ஆனந்த் திடுகிட்டான்.ஒரு வாரம் முன்னாடி பார்த்த அதே முகம்.இவள் இந்நேரம் தன் குடும்பத்துடன் சந்தோசமாக இருப்பாள் என்று நினைத்தான்.இவள் எப்படி இங்கே அதுவும் இந்த நிலையில் என்று குழம்பினான்.ஒரு வேளை இவள் தன் வீட்டுக்கு போகவே இல்லயோ என்று எண்ணும் போதே குற்ற உணர்ச்சி அவனை தாக்கியது.மனதில் ஏதோ ஒரு பயம் வந்து தொற்றிக் கொண்டது.

       அந்த பெண்கள் அவள் வயிற்றை அமுக்கினார்கள்.அவள் தண்ணீரை கக்கினாள்.சிறிது நேரம் கழித்து அவள் இருமினாள்.

"எல்லோரும் கொஞ்சம் தள்ளி நில்லுங்கப்பா அந்த பொன்னுக்கு காற்று வரட்டும்",என்றார் ஒருவர்.

"யாரு மா நீ.தனியாவா வந்த.தண்ணில அவ்வளவு தூரம் போகலாமா.முழ்கீர மாட்ட.என்ன பொன்னோ போ.",என்றார் ஒருவர்.
அவள் எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டு இருந்தாள்.

"யாரு நு கேட்கிரோம்ல.உன் வீடு எங்கே நு சொல்லு கொண்டு
போய் விட்டரோம்",என்று அதட்டினார் ஒருவர்.அவள் பயந்த முகத்தோடு அவரை பார்த்தாள்.ஆனந்த் உள்ளே நுழைந்தான்.கூட்டதில் இருவர் அவன் குப்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களிடம் பேசினான்.

"அண்ணே இந்த பொன்னு எனக்கு தெருஞ்ச பொன்னு தான் அண்ணே.வீட்ல ஒரு பிரச்சனை அதான் தனியா வந்திர்க்கு.நான் பார்த்துகுரேன்",என்றான் ஆனந்த்.

"எப்படி பா உன்ன நம்பி இந்த பொன்ன அனுப்புரது.உனக்கு தெரியும் என்பதர்க்கு என்ன ஆதாரம்",என்றார் கூட்டத்தில் இருக்கும் ஒருவர்.

"இல்லீங்க அய்யா.இந்த பையன் எங்க குப்பத்தை சேர்ந்தவன் தான்.ரொம்ப நல்லவன். பொய் சொல்ல மாட்டான்.அவன் பார்த்துப்பான்.நம்ம போய் நம்ம வேலையை பார்ப்போம்",என்றார் குப்பத்தை சேர்ந்த ஒருவர்.
அனைவரும் கலைந்து சென்றனர்.
அவள் ஆனந்தை பார்த்தாள் ஆனால்
அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

"நீ தற்கொலை பன்னிக்க தான் தண்ணீல குதிச்சனு எனக்கு தெரியும்.என் மேல நம்பிக்கை இருந்தால் என்கூட வா.உன்ன ஒரு பத்திரமான இடத்துல தங்க வைக்குரேன்.
இந்த நேரத்தில் இங்கு தனியாக இருப்பது பாதுகாப்பு இல்லை.அப்புறம் உன் இஷ்டம்.",என்று கூறி அவள் பதிலை எதிர்பார்காதவன் போல நடக்க ஆரம்பித்தான்.சிறிது தூரம் சென்று திரும்பி பார்த்தான்.அவள் அமைதியாக அவனை பின் தொடர்ந்து கொண்டு இருந்தாள்.ஏதோ ஒரு சந்தோசம் அவன் மனம் எங்கும் நிரம்ப.ஒரு புது வாழ்கையை நோக்கி இருவரும் பயணித்தார்கள்.

திருடிவிட்டாய் என்னைDonde viven las historias. Descúbrelo ahora