♥️ அன்றில் அவன் 5♥️

120 8 1
                                    

காலை நேரம் வயலுக்குச் செல்வதற்கு கிளம்பி நேற்று மீதமான சோறை தண்ணீர் ஊற்றி அருந்திக் கொண்டிருந்தார் பரமமூர்த்தி தாத்தா.

எட்டு மணி இருக்கும் அப்போது போர்வையை விலக்கி சோம்பல் முறித்தவாறு எழுந்தாள் தமிழினி.

"தாத்தா காபீ போட்டையா..?" கொட்டாவி விட,

"கங்குல கிடைக்கு சூடா தான் இருக்கும் ஊத்தி குடித்தா. உரம் விதைக்க வேண்டியது இருக்கு வெயில் வர்றகுள்ள வெள்ளன போறேன்..."

"நானும் வரேன்..."

"நீ எதுக்குத்தா. வீட்டுல இரு டிவியை பார்த்திட்டு..." உண்டவாறே பேச, பொரையேற துரத்தினார்.

"என்ன கூட்டிட்டு போக மாட்டேன்னு சொன்னேல உனக்கு இது தேவை தான்..." கூறியவாறு அருகில் வந்தவளின் கரங்கள் தண்ணீரை எடுத்துக் கொடுத்து, தட்டிக் கொடுத்தது.

"உனக்கு சோறாக்கி முட்டை குழம்பு வச்சிருக்கேன். பாத்திரத்தை தொறந்து போட்டுறதே பூனை வந்திரும் சரியா..." உண்டு முடித்து எழ முயல, ஆணியில் தொங்கிய சட்டை பையிலிருந்து கைபேசி ஓசை எழுப்பியது.

"யாரும்மா பாருத்தா..."

"நீ போய் உரத்தை அல்லு பார்க்குறேன்..." கூறியவளோ அங்குச் சென்று எடுக்க, அதில் திருத்தனி என்ற பெயர் ஒலித்தது.

"தாத்தா..! மாமா தான் கூப்பிடுறாக..." கூறிவிட்டு அதனை எடுத்தாள்.

"ஹலோ மாமா..!" இன்முகமாய் அழைக்க,

"உன் தாத்தா எங்கே..?" எடுத்ததும் வேகமான குரல் தான்.

"இதே இருக்காங்க மாமா..."

"குடு அவர் கிட்ட பேசணும்..." என்றதும் சரி என்றவாறு தாத்தாவிடம் கொடுக்க அதனை வாங்கினார்.

"என்னலே சொல்லு சீக்கிரம்..?"

"உனக்கு என் கிட்ட பேச கூட நேரமில்லையோ..?"

 அன்றில் அவனோ Donde viven las historias. Descúbrelo ahora