அத்தியாயம் : 20
அவர்கள் ஊரில் இருக்கும் முருகர் கோவிலில் திருமணம். அருகே இருக்கும் சிறிய மண்டபத்தில் சாப்பாடு என்று முடிவு செய்திருந்தது. நாளை தீபனோடு வருவதாக திருத்தனி தந்தைக்கு அழைத்து கூறியிருந்தார். அவர்கள் இருந்த வீட்டினை தவிர அந்த ஊரில் இருந்த சொத்துகள் முழுவதையும் வித்துவிட்டார். மகனும் அவனின் கடனை அடைத்து ஒரு வாரத்திற்க்கு முன்பு தான் இரு மகளின் திருமணத்தையும் முடித்துவிட்டார்.
மறுநாள் சொந்தங்கள் சிலர் மட்டுமே அவர்களும் வந்துவிட எதிர்பார்த்து காத்திருந்த தமிழினிக்கு ஏமாற்றம் மட்டுமே..! காரணமோ தீபன் இரவு தான் வருவான் என்ற செய்தி. அதுவும் மகள்கள் இருவரும் நாளை அதிகாலை வருவார்கள். விருந்திற்கு சென்றிருக்கிறார்கள் என்ற தகவல். ஆகமொத்தம் வந்தது திருத்தனி, மங்களம் மட்டுமே..!
ஓரே ஊர் சொந்தம் என்பதால் பெண் அழைத்துச் செல்லும் படலம் என்பதே இல்லை. அப்போது கூட தனியாகவே இருந்தாள் தமிழினி. இது கூட சந்தோஷம் தான் என்றே நினைத்துக் கொண்டாள். அவளோடு பயின்றவர்கள் அனைவரும் கல்லூரி செல்கிறார்கள். ஆனால் தானோ..!
எங்கே தன் மகன் கடைசி நொடியில் காலைவாரி விட்டுவிடுவானோ என்ற எண்ணத்தில் தீபனின் பெற்றவர்கள் இருவரும் சுற்றிக் கொண்டு இருந்தனர். மகன் செய்த ஆர்பாட்டம் அவர்கள் மட்டுமே அறிவார்கள்.
ஆதவன் விழி திறந்து அன்றைய நாளினை தமிழினியை ஆசிர்வதிக்க வந்திருந்தனர். அதிகாலையிலே அவர்கள் வீட்டின் முன் கார் வந்து நிற்க, அதில் இரு பெண்கள் தங்களின் கணவர்களோடு முகம் முழுவதும் பூரிப்போடு புதுமண தம்பதியராய் இறங்கினர்.
“அடடா என் பேத்திகளா வாங்க..! வாங்க மாப்பிள்ளை...!” பரமமூர்த்தி தாத்தா வரவேற்க, இன்முகத்தோடு ஏற்றுக் கொண்டனர் புது மாப்பிள்ளைகள் இருவரும்.
“அம்மா..!” அழைத்தவாறு உள்ளே ஒரு அறைக்கு நுழைய, அங்கே அமர்ந்திருந்த தமிழினியை கண்டனர்.
ESTÁS LEYENDO
அன்றில் அவனோ
Romanceஎன்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..? Ebook link: https://www.amazon.in/dp/B0BLP4RTRZ Full audio novel playlist: https://youtube.com/playlist?list=PLOdd6U7eksBgoZyOfs0qiEzzanS7irbSa
