❣️ அன்றில் அவன் 6 ❣️

125 7 3
                                        

அத்தியாயம் : 6 

திருமணம் என்றால் என்ன என்பதை முழுதாக அறியவில்லை என்றாலும் ஓரளவு தெரிந்தது அவளின் மனதை பொறுத்தவரை நரகம் என்றே..!

‘தன்னால் சுதந்திரமா இருக்க முடியாது..? தன் தாத்தாவினை விட்டு எங்கோ சென்று விடுவோம். தோழிகளை பார்க்க முடியாது. நினைத்த நேரம் சுத்த முடியாது. மாமியார் அதிகாரம் செய்வார். தன்னை கொடுமைப்படுத்துவார்கள்..’ என்று அவள் பார்க்கும் படங்களில் வருவதை நினைத்து கலங்கினாள்.

“அத்தே..! எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம். செய்தில சொன்னாங்க பதினெட்டு வயசு முடிஞ்சா தான் கல்யாணம் பண்ணனும் இல்ல போலீஸ் பிடிச்சிட்டு போயிருவாங்க...”

“புத்தி கெட்டவளே..! இது கிராமம்டி. அதெல்லாம் இங்கே கணக்கு இல்லை. நீ வாக்கப்பட்டு போற இடமும் நம்ம ஊரு மாதிரி தான். பழக்கப்பட்ட மாதிரி நீ இருந்துக்கலாம். எனக்கு எல்லாம் பதினாறு வயசுல கல்யாணம் பண்ணி வைச்சாங்க. இந்தா என்ன போலீஸ்சா பிடிச்சாங்க. ரெண்டு புள்ளையை பெத்திட்டு கிடைக்கல...” கூறியவாறு கூந்தலை பின்னலிட்டு கொண்டு வந்த பூவினை தலை நிறைய சூடிவிட்டார்.

“பூவச்சதும் அழகா மாறிட்டே..! என்னடி கருப்பா இருக்கே வெய்யில்ல சுத்தாதேன்னா எங்கே கேட்குற..? எங்கே அந்த பவடரை வச்சே..!”

“அந்த மாடக்குழில கிடக்கு...”

“என்னடி அங்கே போட்டு வச்சிருக்கே..? பவுடரே போடுறது இல்லை. அப்போ கருப்பா தான் இருப்பே..!” திட்டியவாறு அதையும் எடுத்து போட்டு விட்டு ஒரு வழியாக அலங்கரித்து முடித்தார்.

“இப்போ தாண்டி அழகா லட்சனமா பொண்ணு மாதிரி இருக்கே..? இங்கையே இரு நான் வந்துறேன்....” கூறிய காமாட்சி வெளியே வர,

“என்ன மாமா..! இன்னுமா எட்டு மணி பஸ் வரல...”  வாசலில் காத்துக் கொண்டிருந்த பரமமூர்த்தியிடம் கேட்டவாறு வர, அதே நேரம் அவர்களும் தெருவிற்குள் நுழைந்தனர்.

 அன்றில் அவனோ Donde viven las historias. Descúbrelo ahora