அத்தியாயம் : 22
நேரம் சென்று அனைவரும் காலை உணவினை முடிக்க, கோவிலுக்கு கிளம்ப வேண்டுமென பரமமூர்த்தி கூறினார்.
“தாத்தா..! என்ன மன்னிச்சிருங்க. நான் ஊருக்கு போகணும். நாளைக்கு ஒரு கம்பெனில இன்டர்வியூ இருக்கு அட்டன் பண்ணனும்...”
“அப்படியா..! சரி வேலை ரொம்ப முக்கியம். இப்போ உனக்கு கல்யாணம் ஆகிருச்சில. ஏத்தா தமிழு போய் உன் பெட்டியை தயார்படுத்து...” என்று பேத்தியிடம் கூற,
“நீங்க வாங்க...”
“நல்லா சொன்ன போ..நான் அங்கே வந்துட்டா இங்கே இருக்குற...” கூற வந்தவரின் வார்த்தையோ வேதனையோடு உள்ளுக்குள் சென்றது.
“தாத்தா..! நீ இங்கே என்ன பண்ண போறே..? சும்மா தானே இருப்பே..வந்திரு தாத்தா எங்க கூட...”
“அதான் உங்க பேத்தியே சொல்லுறால. இன்னும் இங்கே இருந்து என்ன பண்ண போறீங்க..? எங்க கூட வரலாம்ல மாமா...” மங்களமும் உரைக்க, கடைமைக்காக திருத்தனி,தீபன் இருவரும் அதையே உரைத்தனர்.
“சரி இந்த வீட்டை இப்படியே விட்டுட்டா அப்படியே போயிரும். பழைய வீடுல..யாராவது பார்த்து வாடைக்கு விட்டுட்டு ஒரு மாசத்துல வந்துறேன். அப்பறம் உன் கூடவே இருக்கேன்த்தா...”
“நிஜமா..?”
“சத்தியம்மா...”
“அப்போ சரி. நான் கிளம்புறேன்...” என்றவளோ வேகமாய் அறைக்குள் சென்று கிளம்ப ஆரம்பித்தாள். தன் பொருட்கள், துணிமனிகள் அனைத்தையும் ஒரு பைக்குள் அடக்கிக்கொண்டு வெளியே வர, மற்றவர்களும் கிளம்பி இருந்தனர்.
“போகலாம்...வாங்க..!” கூறிய திருத்தனி முன்னேச் செல்ல,
“தாத்தா..போய்ட்டு வரேன்...” விழிகள் கலங்க அழுகையோடு கூறினாள் தமிழினி.
“இங்கே பாருத்தா..! இனி இவங்க எல்லாரும் தான் உன்னோட குடும்பம். இவங்க உன்னை கவனிச்சிக்கிறதை விட நீ இவங்களை நல்லபடியா கவனிச்சிக்கிடனும். இவங்களை விட்டு எங்கையும் நீ போக கூடாது. இவங்க கூடவே தான் இருக்கணும். இவங்களுக்கு கஷ்டம் தராம நடந்துக்கணும். சரின்னு தாத்தாக்கு சத்தியம் பண்ணு...” சிறு குழைந்தையாய் கூறி தன் கரங்களை நீட்ட, அழுகையோடு அவளும் சத்தியம் செய்தாள்.
VOUS LISEZ
அன்றில் அவனோ
Roman d'amourஎன்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..? Ebook link: https://www.amazon.in/dp/B0BLP4RTRZ Full audio novel playlist: https://youtube.com/playlist?list=PLOdd6U7eksBgoZyOfs0qiEzzanS7irbSa
