குழைந்தைகளின் அன்னைகள் இருவரும் அன்னை மடி சுகம் என்பது போல் பிறந்த வீட்டுக்கு வந்ததும் படுக்க தூங்க வெட்டிக்கதை பேசவென்று நேரத்தை கழித்தனர்.“டேய் நில்லுடா பாட்டியால ஓட முடியல... தாத்தா தோள்பட்டை வலிக்குதுடா. கீழே விழுந்துறப்போற மதி...” என்று குழைந்தைகளை வைத்து மல்லுக்கட்ட, ஒரே போல் அவர்களுக்கு பிடித்த கப்பில் பாலினை அங்கே கொண்டு வந்தாள் தமிழினி.
“வந்தாச்சு. சரி சரி..யார் இப்போ நல்லபிள்ளையா சீக்கிரம் குடிக்கிறீங்களோ அவங்களுக்கு இன்னைக்கு அத்தை புதுசா சமைச்சி தருவேன். வாங்க வாங்க உட்காருங்க...” கூறியவளோ நால்வரையும் ஒன்றாக சோபாவில் சாய்ந்து அமர வைத்தாள்.
“நீ சொன்ன மட்டும் கேட்குதுங்க. எங்களை தவிக்க வைக்குது...” மங்களம் கூற,
புன்னகை உதிர்த்தவளோ, “நம்மளும் குழைந்தையை மாறுனா தான் இவங்களை சமாளிக்க முடியும்...” கூறியவாறு மெல்ல மெல்ல அவர்களுக்கு சூட்டினை குறைத்து பருகவும் வைத்தாள்.
“நீ இன்னைக்கு ஆபிஸ் போறையா...?”
“பாட்டி..அத்தை எங்க கூட தான் இருப்பாங்க...நாங்க ராட்டினம்,கார், இந்தா இப்படி சுத்துவாங்களா அங்கே போவோம்...” என்று சைகையால் நிலன் செய்துக் காட்ட,
“சரி..சரி. அப்போ நான் டிப்பன் சமைச்சா மட்டும் போதும்...” கூறிய மங்களம் செல்லப் பார்க்க,
“அத்தை...அவங்களுக்கு...” கூறியவளின் வார்த்தைகளோ அப்படியே உள்ளுக்குள் சென்று விட, செவிகளில் நன்றாகவே விழுந்தது.
“என் மகன் இருக்குறதை நானே மறந்து போயிட்டேன் பாரு. ஏலே தீபனு..ஏலே...” அறையை பார்த்து குரல் கொடுக்க,
“இதோ வரேன்ம்மா...” என்றவாறு வெளியே வந்தான்.
“நீ இன்னைக்கு ஆபிஸ் போறையா..?”
“ஆமா போகாம எப்படி இருக்க முடியும். கண்டிப்பா போறேன். என்னம்மா..?”
BẠN ĐANG ĐỌC
அன்றில் அவனோ
Lãng mạnஎன்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..? Ebook link: https://www.amazon.in/dp/B0BLP4RTRZ Full audio novel playlist: https://youtube.com/playlist?list=PLOdd6U7eksBgoZyOfs0qiEzzanS7irbSa