💞 அன்றில் அவன் 19 💞

93 9 1
                                    

உலகமே மறந்த நொடி இருவரின் பார்வைகள் ஒன்றாக இதயமும் ஒன்றானால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஆழ்மனதில்.

"எக்ஸ்கியூஸ் மீ... கொஞ்சம் வழி விடுறீங்களா..?" கலைப்பது போல் குரல் வர, சட்டென இருவரும் விலகிக் கொண்டனர்.

அதன் பின் புவனிதா இருந்த இடம் நோக்கி வர, மனம் போகும் எண்ணங்களை கலைக்க நினைத்த தீபன், "வாங்க அந்த சைடு போகலாம்..." கூறியவாறு அனைவரையும் அழைத்துச் சென்றான்.

என்ன தான் எங்கு கால்கள் பயணித்தாலும் மனமோ, ' அவனிடமா தான் அப்படி நடந்துக் கொண்டோம்..? தன்னை என்ன நினைத்திருப்பான்..ஏதோ மயக்குவது போல் அல்லவா நினைத்துக் கொண்டிருப்பான். இப்படியா நடந்து கொள்வாய்...' தன்னை தானே திட்டிக் கொண்டாள்.

'பயத்தில் அவன் என்பதை அறிந்தே அப்படி நடந்தானா..? இல்ல வேற யாரும் இருந்தாலும் அப்படி செய்திருப்பேனா..? அவன் நெஞ்சில் சாய்ந்தேன்னே..கரங்களை பற்றினேன்னே ஐயோ..!' தவிக்க,

"என்னாச்சு தமிழு ராட்டினம் சுத்துனதுனால புத்தி கலங்கிருச்சா என்ன..?" தட்டி புவனிதா கேட்கவே, நினைவு உலகத்துக்கு வந்தாள்.

"என்னாச்சு எந்த பாதையில போற..?"

"சாரிக்கா..." தலையை சிலுப்பிக் கொண்டவளோ பின் எப்போது போல் அவர்களோடு நடமாட ஆரம்பித்தாள். இரவினை நெருங்கி விடவே உணவகத்தில் உண்டு விட்டு வருவதாக வீட்டுக்கு தகவல் கூறினான்.

அங்கிருந்த அனைத்தையும் பார்த்து விளையாட சந்தோஷமாக பொழுதினை கழித்து விட்டு ஒரு வழியாக அங்கிருந்து கிளம்பினர்.

"அண்ணா..! இந்த ஹோட்டல்லோட பிராஞ்ச் இங்கே பக்கத்துல இருந்தா போங்க..." என்று ஒரு விசிட்டிங் கார்டினை காட்ட, அதனை பார்த்த டிரைவரும் அங்கேச் சென்றார்.

"புவனி...சாப்பிட்டு போயிறலாம். அம்மாக்கு கால் பண்ணி சொல்லிட்டேன்..." என்றதும் அவளும் சரி என்க, அவன் சொன்ன ஹோட்டலில் முன் காரினை நிறுத்தினர்.

 அன்றில் அவனோ Donde viven las historias. Descúbrelo ahora