❤️ அன்றில் அவன் 26 ❤️

129 6 1
                                        

அத்தியாயம் : 26

தீபன் அங்கு வந்து நின்றதை முதலில் யாரும் கவனிக்கவில்லை.

“இப்போ தான் சொன்னேன் வந்துட்டாரு...” கூறிய தாரா வேகமாய் அவனின் முன்னேச் செல்ல, அதே நேரம் அவனுமே இவர்களை தான் கண்டான்.

சற்று முன் வசந்த் தன் மனைவியிடம் எடுத்துக் கொண்ட அக்கறையும் சேர்ந்தே கண்டான்.

“சார் இன்னைக்கு என்னோட பைனல்டே ட்ரீட் கொடுக்குறேன் வாங்களேன்...” இன்முகமாய் முன்னே சென்று அழைக்க,

“இட்ஸ் ஓகே..நீங்க என்ஜாய் பண்ணுங்க...” கூறியவனோ வந்த வழியே சென்று விட்டான்.

‘எதற்கு வந்தான்...எதற்கு சென்றான்...’ குழம்பிய தாரா இவர்களின் நோக்கி வரவே,

‘தன்னை காணத் தான் வந்தானா இப்போதெல்லாம் அடிக்கடி தன்னிடம் பேச முயற்சி செய்கிறானே...’ தமிழினியின் மனம் நினைத்தது.

உணவருந்தி முடித்து அனைவரும் கிளம்ப, “தமிழினி. நான் உங்க கிட்ட லவ் பிரபோஸ் பண்ணுனேன்னு நியாபகம் இருக்கா இல்லையா..? மறந்தது போல தெரியுதே..?” பின்னே நடந்தவாறு கேட்டான் வசந்த்.

“நான் தான் ரிஜெக்ட் பண்ணிட்டேன்ல...”

“ஆனா காரணம் மட்டும் சொல்ல மாட்டிக்கீங்களே...”

“காரணம் சொன்ன முடிஞ்சிருமா என்ன..?”

“மனசுக்கு தெளிவு கிடைச்சது மாதிரி இருக்கும்....”

“அப்போ சரி சொல்லுறேன். நான் கல்யாணமான பொண்ணு. உங்களை நான் காலம் தவறி சந்திச்சிட்டேன். இதுக்கு மேல என்கிட்டே எதுவும் கேட்காதீங்க...” கூறிவிட்டு நடக்க, அதிர்ச்சி தான். சில நொடி அப்படியே நின்றவனுக்கு அதை ஏற்க முடியவில்லை

‘தான் காதலை கூறும் போது சொல்லாமல்  இருந்தவள். இப்போது ஏன் கூறுகிறாள். காரணம் கூறுவதற்கு இப்படி கூறுகிறாலோ...’ நினைத்தவன் நிமிர அவளோ இல்லை.

 அன்றில் அவனோ Место, где живут истории. Откройте их для себя