❤️ அன்றில் அவன் 15 ❤️

96 9 2
                                    

அத்தியாயம் : 15 

அன்று வாரயிறுதி நாள் விடுமுறை என்பதால் ஓய்வாக சோபாவில் அமர்ந்து தன் கைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாள் தமிழினி.

அவளைக் கண்டு அங்கு வந்து அமர்ந்த திருத்தனி மெல்ல பேச்சினை எடுக்க ஆரம்பித்தனர்.

“சாப்பிட்டீங்களா மாமா. ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே..?”

“நாள் முழுக்க முழுக்க ரெஸ்ட் தானே தமிழு...” என்க, மெல்லிய புன்னகை ஒன்றை வீசினாள்.

“தமிழு...” தயங்க,

“சொல்லுங்க மாமா..?”

“உனக்கு பொருத்தமான மாப்பிள்ளை போட்டோவும் ஜாதகமும் வந்திருக்கு. நீ கொஞ்சம் பார்க்குறையா..? உனக்கு பிடிக்கலைன்னா வேண்டாம் நான் கட்டயாப்படுத்தல...”

“மாமா எனக்கு..” கூற வந்தவள், ஏதோ சத்தம் கேட்டு திரும்ப பின்னே மொட்டைமாடிலியிருந்து கீழே இறங்கி வந்த தீபனை கண்டாள்.

கடைசியாக வசந்த் தன்னிடம் பேசியதால் அலுவலகத்தில் இவன் தன்னை கத்தியது நினைவு வர வெறுப்பேற்றுவது போல், “மாமா..! சொல்லுறேன்னு தப்பா நினைக்காதீங்க..? நான் நீங்க விருப்பப்பட்ட மாதிரி கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா மாப்பிள்ளை யாருன்னு நானே தேடிக்கிறேனே. இந்த போட்டோ எல்லாம் வேண்டாம்...” என்க,

அப்போது அவரின் நினைவில் சட்டென அன்று தன் மனைவி யாரோ ஒருவனின் புகைப்படம் தமிழினி அறையில் இருந்தது கூறியது நினைவு வந்தது.

“அம்மாடி உங்க ஆபிஸ்ல உனக்கு யாரையும் பிடிச்சிருக்காம்மா...” கேட்க, அவளின் பதில் அறியும் ஆவலில் மெல்ல கடந்துச் சென்றான் தீபன்.

அதனை புரிந்துக் கொண்ட தமிழினி, “ஒரு விதத்துல நீங்க சொல்லுறதும் சரி தான். என் ஆபிஸ்ல ஒருத்தவங்களை பிடிச்சிருக்கு. ஆனா என்னால இப்போ எதுவும் சொல்ல முடியாது...” என்றாள்.

 அன்றில் அவனோ Donde viven las historias. Descúbrelo ahora