அத்தியாயம் : 23
நாட்கள் செல்ல குழைந்தைகளும், தேஜா புவனிதா இருவரும் வந்து ஒரு வாரம் கடந்திருந்தது. இந்த ஒரு வாரத்திற்குள் தீபனிடமும் நன்றாக பழகி விட்டனர். பகலில் வேலைக்குச் சென்றாலும் இரவில் தமிழினி, தீபன் இருவரோடு தான் இவர்களின் பொழுதுகள்.
அன்று இரவு மொட்டை மாடியில் அனைவரும் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்க, தமிழினியோடு குழைந்தைகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர்.
தேஜாவோ நாளை கிளம்புவதாக தன் பெற்றோரிடம் கூற, அவரும் அதற்கு சரி என்று கூறி என்னென்ன மகளுக்கு வேண்டுமென கேட்டுக் கொண்டார் மங்களம்.
இவர்கள் பேச அப்போது தான் மேலே வந்த தீபன் விளையாடிக் கொண்டிருப்பவர்களை கண்டான். புன்னகையோடு அவர்களின் அருகில் வர அதே நேரம் பின்னே நகர்ந்த தமிழினி அவன் மீதி மோதி தடுமாற பின்னே நின்றவாறு அவளின் கரங்களை இரண்டையும் அழுத்தப் பற்றினான்.
அந்த அழுத்தம் லேசாக திரும்பி தலை சாய்த்து ஒரு நொடி அவனைக் கண்டவளோ என்ன நினைத்தாலோ பட்டென விலகி தள்ளி நின்றுக் கொண்டாள்.
“மாமா..! மாமா..! நீங்களும் விளையாட வாங்க..?”
“சரி ஓகே வந்துட்டாப் போச்சு. என்ன விளையாடலாம்...”
“கண்ணாம்பூச்சி...”
“சரி நான் கண்ணை கட்டி விடுறேன் நீங்க எல்லாரும் விளையாடுங்க...” கூறிய தமிழினி, தன் கைக்குட்டையை எடுத்து முதலில் ஸ்ரீமதிக்கு கட்டி விட்டாள்.
அவர்கள் விளையாட பெரியவர்கள் தள்ளி அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, இவளோ வாசல்படி அருகே பிள்ளைகள் வரக் கூடாது என்ற எண்ணத்தில் அங்குச் சென்று அமர்ந்தாள்.
காற்றில் கரங்களை துழாவது போல் ஸ்ரீமதி விளையாட அவர்களை அகப்படாது சுற்றி வர அதனை கண்டவாறு அமர்ந்திருந்தாள்.
ВЫ ЧИТАЕТЕ
அன்றில் அவனோ
Любовные романыஎன்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..? Ebook link: https://www.amazon.in/dp/B0BLP4RTRZ Full audio novel playlist: https://youtube.com/playlist?list=PLOdd6U7eksBgoZyOfs0qiEzzanS7irbSa
