❤️ அன்றில் அவன் 18 ❤️

114 7 1
                                        

தமிழ் நினைத்தது கூட தன்னிடம் பழகுவது போல் அவனிடமும் இவர்கள் பழக வேண்டும் என்பதே..! என்ன தான் தனக்கு அவன் தவறு செய்தாலும் மற்றவர்கள் அவனை ஒதுக்கினால் அது மனதினை நெருடுவது போன்றே தோன்றியது.

“என்னம்மா வந்துட்டா..? எதுவும் எடுக்க வந்தியா..?”

“இல்ல அத்தை. உங்க மகன் கூட இருக்காங்க பிள்ளைகள்...”

“அப்படியா நம்ம முடியலையே..?” என்றதும் அவன் வெளியே அழைத்து செல்கிறேன் என்று கூறியதை கூறினாள்.

“சரிம்மா..! இதை அரைச்சி கொடு ஒரே வேலை தான்...” என்று தன் புலம்பலை கூற, பேசிக் கொண்டே சமைக்க ஆரம்பித்தனர்.

“சரி குட்டிஸ் இப்போ கடைக்கு போகலாம்மா வாங்க...” மகிழ்ச்சியோடு அழைத்தவனோ நால்வரையும் தன் பைக்கில் ஏற்றிக் கொண்டு அப்போதே அருகில் ஊர் சுற்ற ஆரம்பித்தான்.

தன் ஏரியாவில் இருக்கும் கடைக்கு அழைத்து வந்தவன், “என்ன வேணும் நீங்க கேட்டு வாங்குங்க பார்க்கலாம்...” என்க, நால்வரும் போட்டிபோட்டு அது இது என்று கேட்டு அனைத்தையும் வாங்கினர்.

இவர்களுக்கு வாங்கியது போதாது, “அத்தைக்கு இது அத்தைக்கு...” என்று தமிழினியையும் சேர்த்துக் கொள்ள, அவள் இல்லை என்றாலும் அவளின் மீது இவர்கள் வைத்த நேசம் நெகிழ்ச்சிக் கொள்ள வைத்தது.

மறுபடியும் திரும்ப வீட்டுக்கு வந்ததும், “அத்தே..! அத்தே..!” அழைத்தவாறு ஓடி வர, சமையலறையிலிருந்து வெளியே வந்தவளிடம் கை நிறைய ஸ்னாக்சோடு நின்றனர்.

“என்ன செல்லம் இதெல்லாம்..?”

“அத்தே..! இதை பாருங்க இதை நேத்து பார்த்தோம்ல நம்ம. அத்தே இந்தாங்க இது உங்களுக்கு...” கடையை அவளின் முன்னே பரப்ப ஆரம்பித்தனர்.

“அத்தே..! எனக்கு பிச்சித்தா. இந்தாக இது நல்லாயிருக்கு நீங்க தின்னுங்க...” என்று அவளோடு அதனை பகிர்ந்தும் கொள்ள கண்டவாறு அறைக்குள் சென்றான்.

 அன்றில் அவனோ Où les histoires vivent. Découvrez maintenant