💖 அன்றில் அவன் 9 💖

124 9 2
                                        

அத்தியாயம் : 9 

டவுனில் இருந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் பரமமூர்த்தி அனுமதிக்கப்பட்டிருக்க, அப்போது தான் விடியல் பிறந்திருக்க அனைவரும் பரபரப்போடு இருந்தனர்.

சிகிச்சை அறையின் உள்ளே பரிசோதித்துக் கொண்டிருக்க வெளியே தவிப்போடு மூவரும் நின்றிருந்தனர்.

நேரம் சென்றதும் மருத்துவர் வெளியே வந்ததும் அவரின் வார்த்தைக்கு காத்திருக்க, “பெரியவர் நல்லா தான் இருக்காரு. பிரச்சனை இல்லை. பிபி அதிகமாகிருக்கு. மனசை போட்டு எதையோ குழப்பிருப்பாரு போல நீங்க பார்க்காம விட்டிருந்தா இன்னும் நெஞ்சு வலி அதிகமா ஆகிருக்கும். நல்ல வேலை பார்த்துட்டீங்க. கவனமா கவனிச்சிக்கோங்க....” கூறிவிட்டுச் செல்ல,

“நல்ல வேலை நான் கூட பயந்துட்டேன்...” மனம் நிம்மதியடைய கூறிய திருத்தனி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார்.

அழுகையோடு இருந்த தமிழினிக்கோ சற்று நிம்மதி பரவியது. அவளுக்கென்று இருக்கும் ஒரே உயிர் அல்லவா..!

“மாமா..! நான் தாத்தாவை போய் பார்க்கட்டா...” கேட்க, பட்டென முறைக்கவே அமைதியானாள்.

அவளின் கரங்களை பற்றிய மங்களம், “ஒன்னுமில்லை சரியா..!” என்க, தலையாட்டினாள்.

சிறிது நேரம் செல்ல வெளியே வந்த செவிலிப்பெண்ணிடம் அவரை காணவேண்டுமென திருத்தனி கேட்க செல்லலாம் எனக் கூறிவிட்டு சென்றாள்.

‘ஓ அப்போ கேட்டிட்டு தான் போகணுமோ...’ நினைத்தவாறு தமிழினி நிற்க, அவளையும் அழைத்துக் கொண்டு உள்ளேச் சென்றனர்.

எதுவும் பேச முடியாது செயற்கை சுவாச கருவி பொருந்தியிருக்க ஆழந்த மயக்கத்தில் இருந்தார். முதல் முறையாக அன்று தான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதைக் கண்ட தமிழினியின் மனமோ வேதனைக் கொண்டது.

“தாத்தா...!” வாய்விட்டு கூட அழைக்க முடியாது மௌனமாய் அமர்ந்திருக்க, அங்கே வந்த செவிலிப்பெண் வெளியேச் சென்று அமருமாறு கூறினாள்.

 அன்றில் அவனோ Donde viven las historias. Descúbrelo ahora