💜 அன்றில் அவன் 11 💜

116 7 1
                                    


நாட்கள் செல்ல இருள் சூழந்த நேரம் வீட்டுக்குள் நுழையும் தமிழினியை வாசலில் அமர்ந்திருந்தவாறு வரவேற்றார் மங்களம். உடன் எப்போதும் உள்ளே அமர்ந்திருக்கும் மாமனார் இன்று வெளியே அமர்ந்திருக்க தன்னிடம் ஏதோ பேச நினைக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொண்டாள்.

ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு அவர்களின் அருகே வர, “வாம்மா...! வா...” வரவேற்க,

“என்ன வெளியேவே உட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க மாமா..?” சந்தேகமாய் கேட்டவாறு அவர்களோடு உள்ளே நுழைந்தாள்.

“ஒன்னுமில்லை எத்தனை நாள் தான் டிவியே பார்க்க. அதான்...”

“இது தான் காரணமா இல்லை அத்தையை எதுவும் கிண்டலடிச்சிக்கிட்டு இருந்தீகளா..?”

“இவளையா..இவ ஊரையே வித்துட்டு வந்திருவா. இவளை நான் கிண்டல் பண்ண முடியுமா. அப்படியே பண்ணுனாலும் தர்மபுத்திரன் கிட்ட அடுத்த நிமிசமே பத்தி வச்சிருவா. அவன் வேற நாளைக்கு சாயங்காலம் வரப் போற..இனி இவங்களுக்கு நடுவுல என் தலை தான் உருளும்...” என்று அவளிடம் கூற வேண்டியதை சேர்த்தே கூறி முடித்தார்.

அவளுக்குள்ளும் அந்த வார்த்தைகள் இறங்கி விட, “சரி நான் போய் பிரெஸ்சாகிட்டு வரேன்...” கூறிவிட்டு மாடியேறினாள்.

அவள் விழிகளை விட்டு மறையவே கணவன், மனைவி இருவரும் ஒருத்தர்கொருத்தர் பரிதாபமாக பார்த்துக் கொண்டனர். 

“என்னங்க. .! இவ ஒன்னுமே சொல்லாம போற..?”

“அவ கிட்ட சொல்ல வேண்டியதை சொல்லியாச்சு. இனி அவன் வரட்டும் பார்த்துக்கலாம்...” கூறியவாறு அமர, தன்னறைக்குள் நுழைந்த தமிழினி கையில் இருந்த பேக்கினை படுக்கையை நோக்கி வீசி எறிந்தாள்.

கோவம், கோவம் அவன் மீது அப்படியொரு கோவம் அடங்கவே முடியாத அளவுக்கு விட்டால் இந்த நிமிடமே அவனை கொன்று விடுவேன்னென மனமோ கொதித்தது.

 அன்றில் அவனோ Donde viven las historias. Descúbrelo ahora