💞 அன்றில் அவன் 29 💞

132 6 1
                                        

அத்தியாயம் : 29

இரவு உணவு முடித்த போது ஹாலிலே அமர்ந்திருந்தான் தீபன். தமிழினியோ சமையலறையில் பொருட்களை ஒதுங்க வைத்துக்கொள்ள, தீக்காயம் பட்டதுபோல் சூடுபட்ட விரலை ஆட்டி ஊதிக் கொண்டிருந்தான்.

நேரம் சென்று விளக்கினை அமர்த்தி விட்டு வெளியே வர, “ஸ்ஆஆஆஅ...வலிக்குதே..? நாளைக்கு வேற முக்கியமான வேலை இருக்கு. எப்படி தான் டைப் பண்ணவோ தெரியலையே..?” எங்கோ பார்ப்பது போல் சத்தமாக புலம்ப,

கீழே இருந்த தீபனின் பெற்றோர் அறைக்குச் சென்றவளோ அடுத்தநொடி திரும்ப கையில் மருந்தோடு அவனை நோக்கி வந்தாள்.

“ஆஹா...! ஆஹா..! நடக்குறது எல்லாம் உண்மை தானா...எனக்காக தான் மருந்தெடுத்துட்டு வராலா...”

“டேய் எப்போ எந்த நொடி எப்படி நடக்குன்னு சொல்ல முடியாதுடா...” நினைக்க, அருகில் வந்தவளோ பட்டென அவனின் கரம் பற்றி தன்னை நோக்கி இழுத்தாள்.

லேசாக சிவந்திருந்த விரலைக் கண்டு முறைத்தவாறு கொண்டு வந்த மருந்தினை போட்டு மென்மையாய் தேய்த்து விட விழி மூடி அனுபவித்தான். விழிகள் மூடிய அவனின் பார்வைகள், சொல்ல முடியாத உணவுர்கள் பட்டென தன் மனதை திரும்பிக் கொண்டவளோ சென்று விட்டாள்.

‘அவ்வளோ தானா அதுக்குள்ளவா போட்டா..? ஒரே ஒரு நிமிஷம் தான். சரி இதுவும் பொக்கிசமான நிகழ்வு தான். என்ன கொஞ்சம் வெளிப்படையா அவளோட மனசை காட்டிருந்தா நல்லாயிருக்கும்...’  மாடியேறிச் செல்பவளை கண்டவாறு அமர்ந்திருந்தான்.

‘தன் மனம் ஏன் அவனை விரும்புகிறது..? தனக்கு அவன் எத்தகைய காயத்தை கொடுத்தான் ஆனால் தன்னாலோ சிறு துளி கூட வெறுக்க முடியவில்லை. பல வருடங்களுக்கு முன்பும் சரி இப்போதும் சரி அவன் மீது எனக்கு காதல் இல்லையே..? பின் ஏன் அவன் மட்டுமே தன் உலகமென நினைக்கிறோம். அவன் இல்லையென்றாலும் இத்தனை வருடங்களில் மனமும் நினைவும் நிறைந்தது ஒருவனே..! அவன் இல்லாத வாழ்க்கை தன்னால் முடியுமா..?’ தனக்குள்ளே கேட்டுக் கொண்டவளுக்கு கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலி நெஞ்சினை அழுத்துவது போல் உணர்வு.

 அன்றில் அவனோ Donde viven las historias. Descúbrelo ahora