தன் மகனைக் கண்டு , “வாடா...” அன்னை அழைக்க, முன்னே வந்து அமர்ந்து நிமிர அப்போது தான் அவளைக் கண்டான்.
முன்புக்கு இப்போது முற்றிலும் மாற்றம். அவளா என்ற சந்தேகம்..! இயற்கை அழகோடு ஜொலிக்கும் பேரழகியாய். பஞ்சு போன்ற கூந்தலை சுருட்டி கிளிப் போட்டிருக்க, பிங்க் கலர் டீஷர்ட் ஆடைக்குள் மறந்த ஒற்றை செயின், விழிகளுக்கே தெரியாத மெல்லிய தோடும் ஒற்றை கையில் மட்டும் பிரேஸ்லெட். இத்தனைக்கும் வீட்டில் இருப்பது போன்று தான் இருக்கிறாள். இருந்ததும் தேவதையாய் மின்னும் பளிங்கு தேகம். கல் வைத்த இஸ்டிக்கர் பொட்டு, கருவிழிகளுக்கு கீழ் கருமை மச்சம்.
“அடேய்..! டேய்..!” தோள் தட்டி அழைக்கவே, பார்வையை மீட்டுக் கொண்டான்.
“அறிவுகெட்டவனே இப்படியா பார்ப்பே...” தன்னை தானே திட்டிக் கொண்டு உண்ண ஆரம்பித்தான். தமிழினியோ எப்போதும் போல் உண்ண, உரிமையாய் பேச, கிண்டலடிக்கவென்று திரும்பியும் கூட அவனை பாராது இருந்தாள்.
தீபனுக்கோ என்னவோ தான் ஒதுக்கியது போல் தனக்கும் இந்த வீட்டுக்கும் சம்மந்தமே இல்லாதது போல் இருந்தது. அவனின் தந்தை கூட அவனிடம் பேசவில்லை. அவனுக்கு தேவையானதை பார்த்து பார்த்து பரிமாறியது என்னவோ அவனின் அன்னையே..!
“சரி அத்தை நாளைக்கு சீக்கிரம் ஆபிஸ் போகணும். போய் தூங்குறேன் குட் நைட். மாமா மறந்திராம மாத்திரை போட்டுக்கோங்க...” உண்டு முடித்ததும் கூறியவள் சென்று விட, உடை, நடை, அழுகு, பேச்சு இப்படி அனைத்துமே அவளிடம் மாறியிருந்தது.
நேரம் செல்ல, “அடுத்து என்ன பண்ணுறதா உத்தேசம்...?” இப்போது தான் வாய் திறந்து மகனிடம் திருத்தனி கேட்க,
“அங்கே வேலை பார்த்தா கம்பெனியோட பிராஞ்ச் இங்கே இருக்கு. அங்கே இருந்து இங்கே ட்ரான்ஸ்பெர் பண்ணிருக்காங்க. வர்ற மண்டே போய் ஜாயின் பண்ணனும்...”
KAMU SEDANG MEMBACA
அன்றில் அவனோ
Romansaஎன்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..? Ebook link: https://www.amazon.in/dp/B0BLP4RTRZ Full audio novel playlist: https://youtube.com/playlist?list=PLOdd6U7eksBgoZyOfs0qiEzzanS7irbSa
