💗 அன்றில் அவன் 7 💗

132 7 4
                                        

அத்தியாயம் : 7 

வயலில் வேலை முடித்து வந்த பரமமூர்த்தி தாத்தா  மாலை நேரம் போல் ஓய்வாக வீட்டு வெளித்திண்ணையில் அமர, அங்கே வந்தாள் தமிழினி.

“என்ன தாத்தா வந்துட்டையா..? வர்ற வர்ற உனக்கு வயசானதுனால முடியல போலையே கிழவா...”

“ஹே..! யாருக்கு வயசாகிருச்சி இந்த நிமிஷம் வரை சாம்பாரிச்சி சாப்பிடுறேன் தாயி...”

“இந்த கௌரவத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. உன் உடம்பை நீ தானே பார்த்துக்கணும். இந்தா கருப்பட்டி காபீ குடி சூடா இருக்கு...”

“என்னை பார்த்துக்க தான் நீ இருக்கையேத்தா..?”

“அப்போ எதுக்கு என்ன அனுப்ப பார்க்குற..?” கேட்டவளின் குரலும் அடங்கி விட, உதட்டை பிதிக்கினாள்.

“என்னைக்கா இருந்தாலும் ஒரு நாள்...” கூற வர,

“போதும்..போதும் நீ உன் பழைய புராணத்தை ஆரம்பிடிச்சிராதே..? எனக்கு பரிச்சை ரிசல்ட் வந்திருச்சி. நான் எல்லா பாடத்துலையும் பாஸ்சாகிடேன்...”

“அடியேய்..! கேனச்சி நீ பாஸானா என்ன ஆகாட்டி என்ன..? அதான் கல்யாணம் பண்ணனும் முடிவு பண்ணியாச்சே..? இனியாவது அடக்கமா வீட்டு வேலையெல்லாம் நல்லா கத்துக்கோ. என் வீட்டுக்கு வா சொல்லித் தரேன்...” என்றவாறு தண்ணீர் எடுக்கச் சென்ற காமாட்சி வர,

“சூனியக்கார அத்தே..!” மனதிற்குள் திட்டிக் கொண்டு தூணை பிடித்து தேய்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னடி அமைதியா முறைக்கிற..? சரி என்ன மாமா..! அன்னைக்கு வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரருக்கு இன்னும் தகவல் சொல்லலை போல... நேத்து எனக்கு போன் பண்ணி கேட்டாங்க. நான் கேட்டு சொல்லுறேன்னு சொன்னேன். என்ன முடிவு பண்ணிருக்கீக..?”

“நான் காலேஜ் போய் படிக்க போறேன்...” என தமிழினி வேகமாய் அவர் கூறுவதற்கு முன்னே முந்திக் கொண்டு கூற,

 அன்றில் அவனோ Donde viven las historias. Descúbrelo ahora