அத்தியாயம் : 31
நாட்கள் செல்ல தந்தை தனக்கு துரோகம் செய்ததால் அவரின் பேச்சினை கேட்காது தன் விருப்பம் போலே வலம் வந்தான் தீபன்.
இதற்க்கிடையில் தேஜா, புவனிதா இருவரும் கருவுற்றிருக்க அன்னை வீட்டுக்கு வர விரும்பினர். சரி என்று கூறி சிறிது நாட்கள் அவர்களையும் அழைத்து வந்திருந்தனர்.
வந்தவர்களை அன்போடு தமிழினி நலம் விசாரிக்க அவர்களுக்கும் கூட அவளை பிடிக்கவில்லை.
ஒரு நாள் ஹாலில் அமர்ந்திருந்த தேஜாவிடம், “மதினி இந்தாக ஜீஸ் குடிங்க...” தமிழினி நீட்ட,
“மதினியா..? ஹோய் இங்கே பாரு ஒழுங்க இப்படி பட்டிக்காட்டா மாதிரி கூப்பிடுறதை நிறுத்தி அக்கா சொல்லு, இல்ல என் பேரை சொல்லியே கூப்பிடு...” முகத்தில் அடித்தார் போன்றே கூறவே, சரியென்றாள்.
பேத்திகள் இருவரின் நல்ல செய்தியைக் கேட்ட பரமமூர்த்தி தாத்தா, தமிழினிக்கும் இப்படி நல்ல செய்தி கிடைக்கவேண்டுமென வேண்டுதல் ஒன்றை வைத்து ஊருக்கு கிளம்ப நினைத்தார்.
ஆனால் அதற்குள் வீட்டினை ஒத்திகைக்கும், வாடகைக்கும் பார்க்க ஆள் வந்துக் கொண்டிருக்க, சரி முடித்து விட்டு ஒரேடியாக மகனின் வீட்டுக்குச் சென்று கொள்ளாமல் என்றே நினைத்தார்.
தமிழினியோ ஒவ்வொரு நாளும் தாத்தாவின் அன்புக்கும், வருகைக்கும் காத்திருந்து நாட்கள் தான் கடந்துக் கொண்டே இருந்தது.
தேஜா, புவனிதா இருவருக்குமே வாந்தி, மயக்கமாக என்ன உணவு கொடுத்தாலும் ஒத்துக் கொள்ளாதது போலே இருந்தது. கவனமோடு மாமியாரோடு சேர்ந்து தமிழினியும் கவனித்துக் கொண்டாள்.
தீபனும் வழக்கம் போலே சுற்றிக் கொண்டே வந்தான். சகோதரிகள் இருவரிடமும் என்ன என்றால் என்ன இது தான் அவனின் பேச்சு. ஆரம்பத்திலிருந்து தனித்தனி அறை போல் அவர்களும் தனித்தனி தான்.
YOU ARE READING
அன்றில் அவனோ
Romanceஎன்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..? Ebook link: https://www.amazon.in/dp/B0BLP4RTRZ Full audio novel playlist: https://youtube.com/playlist?list=PLOdd6U7eksBgoZyOfs0qiEzzanS7irbSa
