♥️ அன்றில் அவன் 14 ♥️

114 7 1
                                        

அத்தியாயம் 14 

சத்தம் கேட்டு தேஜா, புவனிதா இருவரும் அறையிலிருந்து வெளியே வர, “என்னம்மா எதுக்கு கத்துற..?” அலட்சியாய் கேட்கவே, ஏற்கனவே தந்தையால் மனம் உடைந்த திருத்தனி பிள்ளைகள் மூலம் மேலும் நிலைகுலைந்தார்.

“வாயை மூடுங்கடி. இப்போ என்ன உங்களுக்கு தேவையானது கிடைக்கணும் அப்படி தானே கிடைக்கும். அடுத்த வாரம் நம்ம கடனெல்லாம் அடைச்சிட்டு தாத்தா வீட்டுக்கு போறோம். இனி அங்கே தான் இருக்கப் போறோம்...”

“எங்க கல்யாணம் நடக்க இன்னும் நாப்பது நாள் தான் இருக்கு. எங்களால கிராமத்து எல்லாம் வர முடியாது. நீங்க போங்க இந்த வீட்டை விக்கணும்னா கூட வித்துக்கோங்க. ஏதா இருந்தாலும் எங்க கல்யாணத்துக்கு அப்பறம் பண்ணுங்க...”

அதில் கூட தன் பெண்கள் இருவரும் சுயநலமாக தான் இருக்கிறார்கள். தமிழினியை கண்டு அவளோடு பழகிய பின் தான் தங்களின் வளர்ப்பு தவறென்பது புரிந்தது. திருத்தனி பிள்ளைகளே என்றாலும் பேச கூட உரிமையில்லாது போய்விட எடுத்த முடிவினை மங்களமே கூறினார்.

“இந்த வீட்டை ஒன்னும் விக்கல. அது இங்கே தான் இருக்க போகுது. அடுத்த வாரம் நம்ம அங்கே போறது உங்க அண்ணனோட நிச்சியத்துக்கு தான்...”

“அம்மா...!” பேரதிர்ச்சியாய் தீபன் கேட்க,

“என்னடா..? இங்கே பாரு உன் தாத்தா என்கிட்டே தெளிவா சொல்லிட்டாரு. அவரோட பேத்திக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வச்சா தான் சொத்தை வித்து பணத்தை தருவேன்னு. எங்களுக்கு வேற வழி தெரியல. அதுனால நாங்களும் சரின்னு சொல்லிட்டோம். உனக்கு வயசு குறைச்சல் மாதிரி தான் அவளுக்கும். அவ ஒன்னும் உன்னை விட பெரியவள்ன்னு நினைக்காதே...”

“உங்க விளையாட்டு...” கூற வர,

“வாயை மூடு எதிர்த்து பேசாதே..? நான் முழுசா சொல்லிக்கிறேன். இப்போ நீ இதுக்கு சம்மதம் சொல்லல அப்பறம் என்னை போட்டோல மாலையா தான் பார்ப்பே..? இவளுக கல்யாணம் நடக்காது அதை பார்த்துக்கோ. கல்யாணம் வேண்டாம் அப்படின்னா உங்க அப்பா கடனை அடைச்சி காட்டு பார்க்கலாம் நீ...” கூறிய மங்களம் தன் கணவனோடு அங்கிருந்துச் சென்று விட்டார்.

 அன்றில் அவனோ Onde histórias criam vida. Descubra agora