💞 அன்றில் அவன் 27 💞

120 7 2
                                        

அத்தியாயம் : 27

அதிகாலை வேலை பக்கத்து வீட்டு பறவைகளில் சத்தம் கேட்டு எழுந்த தீபன் மணியைக் காண ஆறு பத்து. அவள் எழுந்திருப்பாளா..? காபீ குடிப்பதற்கு கீழே வருவாளே..? நினைத்தவனோ சோம்பல் முறித்தவாறு வெளியே வர அவள் இருப்பதற்கான அடையாளம் இல்லை.

இன்னும் வரவில்லை என்பது புரிந்தது. கதவினை திறக்க கேட்டின் அருகே பால் பாக்கெட்டும், பேப்பரும் இருக்க எடுத்துக் கொண்டு பூட்டி வீட்டுக்கு திரும்ப வாசலில் வண்ணக்கோலம்.

‘இதனை எப்போது போட்டால் அப்படியென்றால் எழுந்து வந்தாளா என்ன..?’ எண்ணியவாறு சமையலறைக்குள் செல்ல பொருட்கள் சுத்தமாக இருந்தது.

புரிந்தது வந்து மறுபடியும் அவளின் அறைக்குச் சென்று விட்டால் என்பது. காபீ குடிக்கலாம் போல் தோன்றவே போட தெரியாதே  முதலில் அடுப்பினை பற்ற வைத்தால் தானே அது தெரிய..? அப்படியே பால்பாக்கெட்டினை பிரிட்ஜில் வைத்துச் சென்று விட்டான்.

சிறிது நேரம் ஜாக்கிங் சென்று வந்தவனோ வெளியே இருந்த தந்தையின் இருக்கையில் அமர்ந்து பேப்பர் படிக்க அதனை கலைப்பது போல் சமையறலையில் இருந்து மனம் கவரும் வாசனை.

“ஆஹா..! வாசனையே சூப்பரா இருக்கு. குளிச்சிட்டு சீக்கிரம் ப்ரேக்பஸ்ட் சாப்பிடலாம்...” நினைத்துக் கொண்டு, அவள் சமையலறையில் இருப்பது சத்தம் கேட்டு புரியவே தன் அறைக்குச் சென்று விட்டான்.

ஆனால் சமையறலையில் தமிழினியோ தனக்காக சாப்பிட்டினை மட்டும் செய்து கொண்டு வேணுமென்றே அவனுக்கு செய்வதை தவிர்த்தாள். மறக்காமல் மாவினை அவனின் கண்படும்படி வைத்தாள். வேணுமென்றால் தோசை வார்த்துக் கொள்ளட்டும் என்ற எண்ணம். ஒரு நாள் செய்தால் தினமும் செய்வேன் என்று எதிர்பார்த்து உரிமை கொள்ளவா..?

குளித்து முடித்து அலுவலகம் செல்ல கிளம்பி எட்டு முப்பது போல் வெளியே வந்தவன் டைனிங் டேபிள் காண வெறுமை. சமையலறைக்குள் சென்று பார்க்க, அங்கையும் அவளுக்கான உணவு மட்டும் எடுத்து வைத்திருக்க தனக்கு இல்லை.

 அன்றில் அவனோ Onde histórias criam vida. Descubra agora