அத்தியாயம் : 13
அலுவலகத்தில் ஓய்வு நேரம் தன்னோடு பணிபுரியும் பெண்களோடு சேர்ந்து கேண்டீன் சென்று அமர்ந்தாள் தமிழினி.
அவர்களை போல் அதிகமாக தேவையில்லாத விசியங்களை பேசுவதில்லை என்றாலும் எளிமையான நட்பினை வைத்துக் கொள்வாள்.
“உங்க எல்லாருக்கும் ஒன்னு தெரியும்மா. நான் இன்னைக்கு ஹெச். ஆர் ரூமுக்கு மார்னிங் போகும் போது யார் கிட்டையோ மொபைல்ல பேசிட்டு இருந்தாரு. அப்போ அவர் நோட்டிஸ் ப்ரியர்டு இந்த வீக்கோட முடியுது. நாளைக்கு புது ஆள் வந்திருவாங்க. ட்ரைனிங் கொடுக்கணும் சொன்னாங்க...”
“என்ன சொல்லுற..? ரிசைன் பண்ணிட்டாங்களா..? அப்பாடா ரொம்ப நல்லது நொச்சரிக்கிற தொல்லை முடிஞ்சது...” என்று அமர்ந்திருந்த ஒரு பெண் கூற,
“ஆமா..! ஆமா..! இவனுக்கெல்லாம் பேர்வெல் பார்ட்டியே வைக்க கூடாது...” என இன்னொரு பெண் உரைத்தாள்.
“எந்த நேரமும் நம்ம உயிரே வாங்கவே இருப்பான். அந்த வேலை முடிஞ்சதா இந்த வேலை முடிஞ்சதான்னு..? போய் தொலைஞ்சா தொல்லை கிடையாதுப்பா...”
“ஒரு வேலை வரவங்க இந்த சாரை விட மோசமா இருந்தா என்ன பண்ண..?” தமிழினி கேட்க,
“வேற என்ன..? இருக்குற முடியும் கொட்டி போக, கண்ணும் கெட்டு போக, அந்த சிஸ்டம் முன்னாடியே உட்கார்ந்துக்கிட்டு காலத்தை தள்ள வேண்டியது தான். வேலை பார்த்தா தான் மரியாதை. அந்த மரியாதைக்கு நம்ம பலிகாடு...” என்று புலம்ப, நேரம் செல்ல எழுந்து தங்களின் இருக்கைக்குச் சென்றனர்.
தமிழினி சொல்வது போன்றே நடந்து விட்டால் என்ற எண்ணமே அனைத்து பெண்களின் நினைவிலும் இருந்தது. அதில் இவள் அறியாத ஒன்று வர்றவன் தன் கணவனே என்று..!
அன்று மாலை நேரம் மீட்டிங் ஒன்றை வைத்து ஹெச்.ஆர் பிளஸ் ட்ரைனர் இரு பணிகளுக்கும் சேர்ந்து ஒருவன் வரப் போகிறான் வரவேற்க வேண்டுமென உரைக்க ஏற்றுக் கொண்டனர்.
STAI LEGGENDO
அன்றில் அவனோ
Storie d'amoreஎன்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..? Ebook link: https://www.amazon.in/dp/B0BLP4RTRZ Full audio novel playlist: https://youtube.com/playlist?list=PLOdd6U7eksBgoZyOfs0qiEzzanS7irbSa
