💕 அன்றில் அவன் 10 💕

114 9 1
                                        

பெரியவர்கள் கூறியதை கேட்டு அனைவருமே அதிர்ந்து போய் நின்றனர்.

‘நிச்சியம் இவள் தன் மகனுக்கு பொருத்தமானவள் இல்லை. தங்களாலே ஏற்க முடியாது அவன் எப்படி ஒத்துக்கொள்வான். அதுவும் போக தன் மகனுக்கு இது திருமண வயதில்லையே...! படிப்பையே இப்போ தானே முடித்திருக்கிறான். அவனுக்கென்று ஒரு வாழ்க்கை இல்லாத போது இவள் எப்படி...’ பெற்றவர்கள் இருவரின் மனம் ஒன்றாக நினைத்தது.

“என்னப்பா..! நீ என் பேரன் கிட்ட கூட கேட்டு சொல்லு. நான் நாளைக்கே உனக்கு எல்லாத்தையும் கொடுத்துறேன்...”

“என்ன முடிவுப்பா இதெல்லாம். நான் மறுபடியும் சொல்லுறேன் எனக்கு என் பங்கை மட்டும் கொடுத்தா போதும். வேணும்ன்னா நீங்க வளர்த்த கடமைக்கு சொந்தமா வேணா இருப்பேன்னே தவிர என்னால இதுக்கு ஒத்துக்க முடியாது...” என்று இது தான் தன் முடிவு என்பது போல் திருத்தனி கூற,

“அப்போ என்னால எந்த சொத்தையும் உனக்கு தர முடியாது. நீ இப்பவே இந்த வீட்டை விட்டு கிளம்பலாம்...” அவரும் பிடிவாதமோடு கூறினார்.

“எங்களை விட இந்த பொண்ணு முக்கியம்...”

“ஆமாடா. யாரோ ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி தரதுக்கு பதில் என் பேரனுக்கே கல்யாணம் பண்ணி கொடுத்தா நிம்மதியா இருக்கலாம். அவளும் கஷ்டம் இல்லாம வாழுவா. நீயும் உன் கடனை எல்லாம் அடைச்சிருவே. நீங்க ரெண்டு பேரும் என் கண்ணார கஷ்டம் இல்லாம வாழணும் நினைச்சி தான் இந்த முடிவு எடுத்தேன். இவளை எவனுக்கோ கட்டிக் கொடுத்து அந்த வாழ்க்கை தப்பா போச்சுன்னா என்னால எப்படி உயிரோட இருக்க முடியும். என் பேத்தி தங்கமான பொண்ணு, உனக்கு நான் இவளைபத்தி சொல்லணும் அவசியமே இல்லை...”

“சுயநலமா யோசிக்காதீங்க. என்னை பத்தி யோசிக்கலைனாலும் என் மகன் அவனை பத்தி யோசிங்க. இப்போ தான் கடைசி பரிச்சையே எழுதி முடிச்சிருக்கான். அவனுக்குன்னு ஒரு வேலை இல்லை. வேலைக்கு போறதை பத்தி யோசிருக்கான்னா  இல்ல படிக்க போறான்னா கூட தெரியல. எப்படிப்பா என்னால கல்யாணம் பண்ணி வைக்க முடியும். இருபத்தி மூணு வயசுல கல்யாணம் எப்படி சாத்தியமாகும்...”

 அன்றில் அவனோ Donde viven las historias. Descúbrelo ahora