பெரியவர்கள் இருவருக்கும் தன் கரங்களால் பரிமாற மூவரும் ஒன்றாக உண்ண ஆரம்பித்தனர்.
“என்ன இன்னைக்கு அமைதியா இருக்கீக..? பக்கத்து வீட்டுல கதை பேச போகலையோ..?” கிண்டலாக மங்களத்தை கண்டு கேட்க,
“எப்படி போக முடியும். மழை தான் வெளுத்து வாங்குதே. கரென்ட் வேற இல்லை சீரியலும் பார்க்க முடியல..?” கவலையான முகத்தை வைத்துக் கொண்டு கூறினார்.
“தினமும் அப்படி என்ன தான் பேசுவாளோ இவ..? சொன்னா கேட்க மாட்டிக்கா தமிழு. வீட்டு வேலை முடிஞ்சதும் எங்கையாவது போயிற..? போறவ சொல்லிட்டு போறாளா அதுவுமில்லை. தேட வேண்டியதே என் பொழப்பா போச்சு..?” என திருத்தனியும் சலித்துக் கொள்ள,
“உங்களை யாரும் தேட சொன்னா நான் இல்லனா தான் முழுக்கிழவன் இளவட்டமா மாதிரி குதிப்பீங்களே..?”
“அடியேய்..! அது பேர் உடற்பயிற்சி...”
“துணியை காயப்போட மாடிக்கு போக சொன்னா போறது கிடையாது. சும்மா பத்து தரம் ஏறி இறங்கிறது..?”
“சுத்த விவரங்கெட்டவளா இருக்கே..? உன்னை போய் கட்டிட்டு வந்தேன் பாரு...”
“உங்களை யார் கட்ட சொன்னா..?” கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் ஆரம்பமானது.
இது தினமும் நடக்கும் ஒன்று தான். கிராமத்தில் வாழ்ந்த மங்களத்திற்கு வீட்டிற்குள் அடைந்து கிடைப்பது சுத்தமாக பிடிக்காது. அதனாலே எங்கையாவதுச் சென்று விடுவார். கதை பேசி முடித்து வந்து அதனை சொல்வதே அவரின் முழு வேலை. அப்படி சொல்லவில்லை என்றால் தலையே வெடித்து விடும். அதுவும் தமிழினியிடம் தான் நேரம் செல்வதே தெரியாது பொறனியாக கூறிக் கொண்டிருப்பார்.
“போதும்..! போதும்...” சிரிப்போடு உரைக்க,
“உனக்கு எதுவும் கொண்டு வரவாம்மா...”
“இல்ல வேண்டாம். காலையில நான் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பணும். இப்பவே மணி பத்தாகிருச்சி நான் போய் தூங்குறேன்...” உண்டு முடித்து கரம் கழுவினாள்.
YOU ARE READING
அன்றில் அவனோ
Romanceஎன்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..? Ebook link: https://www.amazon.in/dp/B0BLP4RTRZ Full audio novel playlist: https://youtube.com/playlist?list=PLOdd6U7eksBgoZyOfs0qiEzzanS7irbSa
