அத்தியாயம் : 25
இருள் சூழ்ந்த நேரம் இருளினை போல் அந்த வீட்டில் இருந்த அனைவரின் மனமும் அப்படி தான் இருந்தது. இரவு உணவோ சமைத்தது அப்படியே இருக்க யாரும் உண்ணவில்லை.
அறையில் அமர்ந்திருந்த திருத்தனி யோசனை முழுவதும் மருமகளே..! தெளிவாக சொல்லிவிட்டால் ஒன்று சேர மாட்டோம் என்று..! இனி என்ன செய்வது..? அவளின் வாழ்க்கை தான் என்ன..? இப்படியே இருந்து விட்டால் இந்த உலகம் தான் என்ன நினைக்கும்..?
“என்னங்க..! இந்தாக சுகர் மாத்திரை போடுங்க...” கொண்டு வந்து மங்களம் கொடுக்க,
“இப்போ எதுக்கு இது. செத்தா செத்துட்டு போறேன்...”
“என்னங்க என்ன பேச்சு இது..?”
“பின்ன என்னடி பண்ண சொல்லுற..ஆரம்பத்துல இருந்து நான் சரியா இருந்தா இன்னைக்கு இவ்வளோ பிரச்சனை வந்திருக்காது. இந்த பிள்ளையாவது எங்கையாவது சந்தோஷமமா இருந்திருப்பா. இப்போ என்னால இங்கே வந்து...” அதற்கு மேல் அவரால் கூற முடியவில்லை மனமும், உள்ளமும் கலங்கியது.
“முன்னெல்லாம் நான் தான் இப்படி புலம்புவேன் இப்போ நீங்களா..?”
“அப்போ எனக்கு ஒன்னும் தெரியல. என்னென்னு தெரியாத ஒரு நம்பிக்கை இருந்தது ஆனா இப்போ அது இல்லை. இந்த பிள்ளை நமக்கான பண்ணினது பெத்த பிள்ளையே பண்ணாத ஒரு விசியம்...” என்க,
“மாமா..! அத்தை..!” அழைத்தவாறு அறைக்குள் நுழைந்தாள் தமிழினி.
அழுதிருக்கிறாள் தங்களுக்காக மறைக்கிறாள் பார்த்தாலே நன்கு தெரிகிறது..? நினைக்க, அருகில் வந்தாள்.
“மணி பத்தாகுது. இன்னும் நீங்க சாப்பிடல போல. வாங்க முதல சாப்பிடுங்க ரெண்டு பேரும்...” உரிமையாய் கூறியவளோ இருவரின் கரம் பற்றி அழைத்துச் செல்ல முயல,
“தமிழினி..! எங்களை மன்னிச்சிரும்மா...”
“மன்னிப்பா எதுக்கு மாமா..? இங்கே பாருங்க நான் சொல்லுறதை நல்லா கேட்டுக்கோங்க. தாத்தாவை தவிர உறவே இல்லாம வாழ்ந்த எனக்கு ஒன்னுக்கு ரெண்டு பேரா நீங்க கிடைச்சிருக்கீங்க..? என் வாழ்க்கைக்குள்ள வந்த அப்பவே சொந்த அம்மா, அப்பா மாதிரி தான் பார்க்குறேன். இதை நான் உங்க கிட்ட அடிக்கடி சொல்லிட்டேன்...”
BẠN ĐANG ĐỌC
அன்றில் அவனோ
Lãng mạnஎன்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..? Ebook link: https://www.amazon.in/dp/B0BLP4RTRZ Full audio novel playlist: https://youtube.com/playlist?list=PLOdd6U7eksBgoZyOfs0qiEzzanS7irbSa
