அத்தியாயம் : 21
ஊரே அடங்கிய இரவு நேரம் பரமமூர்த்தியின் வீட்டில் மட்டும் வண்ண விளக்குகள் மின்னிக் கொண்டிருந்தது. நேற்று இரவு பரபரப்பாக இருக்க இன்றோ அந்த வீட்டில் அமைதி, மௌனம் மட்டுமே..!
வந்த சொந்தங்கள், மகன் வழி பேத்திகள் என்று அனைவரும் கிளம்பியிருக்க, சாய்வாக வெளியே போடப்பட்ட பந்தலில் கீழ் இருந்த சேரில் அமர்ந்திருந்தார் பரமமூர்த்தி.
உள்ளே இருந்த அந்த ஒற்றை அறையில் தமிழினியை அலங்கரித்துக் கொண்டிருந்தனர் காமாட்சியும்,மங்களமும்.
காமாட்சியோ அறிவுரை என்ற பெயரில் அலங்கரித்து முடிக்கும் வரை வாய் ஓயாது கூறிக் கொண்டே இருக்க, மௌனமோடு கேட்டுக் கொண்டாள்.
“இங்கே பாரு தமிழு..! நாங்க எல்லாரும் உன் கூடவே தான் இருப்போம். எனக்கு உன்னோட மனசு புரியுது. நம்ம நாளைக்கு ஊருக்கு போகும் எப்படியாவது பேசி உன் தாத்தாவை கூட்டிட்டு போயிறலாம் சரியா...!” என்க,
அதை கேட்ட அடுத்தநொடி பிரசாகமானவளோ, “உண்மையாவா அத்தை..! அப்போ தாத்தா, நம்ம எல்லாரும் ஒன்னா இருக்கலாம்மா..மாமா எதுவும் சொல்லுவாங்களா..?” வேகமாய் கேட்க,
“ஒன்னும் சொல்ல மாட்டாரு...”
“சரி நேரமாச்சு தீபனை அனுப்பி வைக்கிறோம். வா காமாட்சி போகலாம்...” என்றதும் இரு பெண்களும் வெளியேச் சென்று விட, தவிப்போடு தான் அமர்ந்திருந்தாள்.
‘அவனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்பதை இன்று முழுவதும் அவன் உடன் இருந்ததில் அறிந்தது..! சடங்குகள் செய்யும் போது நேராய் கண்டு கொண்டே தானே இருந்தேன். இப்போது அவன் வந்தால் என்ன சொல்லுவான்..?’ நினைக்கும் போது பயம் தொற்றிக்கொண்டது.
காமாட்சி சிறிது நேரம் பேசி விட்டு சென்று விட, “என்னங்க..! தீபனை அனுப்பி வைங்க. எங்க போனான்..?” கணவனிடம் மங்களம் கேட்க,
VOCÊ ESTÁ LENDO
அன்றில் அவனோ
Romanceஎன்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..? Ebook link: https://www.amazon.in/dp/B0BLP4RTRZ Full audio novel playlist: https://youtube.com/playlist?list=PLOdd6U7eksBgoZyOfs0qiEzzanS7irbSa
