♥️ அன்றில் அவன் 24 ♥️

105 9 1
                                        

அத்தியாயம் 24 

குழைந்தைகள் எழுந்ததும் தமிழினியை தேட அவளோ வேலைக்கு சென்று விட்டால் என்பது புரிந்து ஊருக்கு வரமாட்டேன் என்று ஒன்றாக அழுது அடம்பிடிக்க ஆரம்பித்தனர்.

இப்படி அழுவார்கள் அதனை தன்னால் காண முடியாது என்பது தெரிந்தே வெகு சீக்கிரம் அன்று கிளம்பி வந்தாள். முக்கியமான மீட்டிங் ஓன்று இருப்பதால் விடுமுறை எடுக்க முடியாத சூழ்நிலை வேறு அன்று அவளுக்கு உருவாகி இருந்தது.

பார்க்கிங்கில் தன் ஸ்கூட்டியை நிறுத்தியவளோ அந்த கட்டிடத்திற்குள் நுழைய அதே நேரம் அவளோடு வசந்த்தும் அந்த இடத்திற்கு வந்தான்.

“என்ன தமிழினி இன்னைக்கு கொஞ்சம் டல்லா இருக்கீங்க..? எனி பிராபளம்...” கேட்டவாறு லிப்டுக்குள் நுழைய,

“ சரியா தூக்கம் இல்லாததுனால கொஞ்சம் அசதி அவ்வளோ தான்...”

“இந்த தீபன் சார் வந்ததுல இருந்து இப்படி தான். அதிகமா வேலை கொடுக்குறாரு. உங்களை மாதிரி தான் எல்லாரும் ஓய்வே இல்லாம இருக்குறாங்க...”

“ஹ்ம்ம். பார்த்திட்டு தான் இருக்கேன்...” என்றவளின் மனமோ ‘தனக்கு ஒன்றும் அவன் அப்படி அதிகம் வேலை கொடுக்கவில்லை..’ என்றே நினைத்தது.

“தமிழினி நான் உங்க கிட்ட...” தயங்க,

அதிலே புரிந்துக் கொண்டவளோ, “சாரி வசந்த். என்னை ஏன் மறுபடியும் இதையே சொல்ல வைக்கிறீங்க..?” கைகடிகாரத்தை பார்த்தவவாறே கேட்டாள்.

“வருடங்கள் கடந்தாலும் நான் எதிர்பார்க்குறது எனக்கு கிடைச்சா நிம்மதி அதான்...” என்க, திரும்பி அவனின் முகத்தை கண்டவளுக்கோ பாரம் நெஞ்சினை அழுத்தியது.

‘உண்மையை கூறிவிடலாமா..? அப்படி கூறினால் அதன் பின்னே பல கேள்விகள் எழுமே அதற்கு என்ன கூறுவது..?’ தவிப்போடு தான் நினைத்தவளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்ற எண்ணம்.

 அன்றில் அவனோ Where stories live. Discover now