அத்தியாயம் : 30
முகம் மட்டும் பார்க்கும் சிறு கண்ணாடியில் பார்த்தவளுக்கு தான் உடுத்திய உடையின் வடிவமைப்பு முதற்கொண்டு உச்சி முதல் பாதம் வரை தெரியவே அதிசயத்து போனாள்.
“எனக்கு உண்மையில இவ்வளோ முடி இருந்ததா..? இந்த ட்ரெஸ்ல தான் நான் குண்டா இருக்கேன்னா இல்லை எப்பவுமே நான் குண்டு தானா..? காமாட்சி அத்தை சொன்னது சரி தான் கருப்பா தான் தெரியுறேன்னோ. ஆனா அவங்க என்னை விட ரொம்ப கலரு...” வருத்தமோடு கண்டவளுக்கு ஒப்பிட்டுப் பார்க்க, தகுதியில்லாதவள் என்றே தோன்றியது.
“தமிழு ரூமுக்கு வந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகுது என்னம்மா பண்ணுற..?” கேட்டவாறு மங்களம் உள்ளே நுழைய, திரும்பி அவரைக் கண்டாள்.
“என்னாச்சும்மா...” என்க, ஏன்னென்று தெரியாது பல்லை கடித்துக் கொண்டு அழுகை வர, தன்னை நோக்கி வந்தவரை அணைத்துக் கொண்டு அழுது கரைந்தாள்.
“அச்சோ..! என்னம்மா எதுக்கு இப்போ அழுகுற தாத்தா நினைப்பு வந்துச்சா..?” தன்னை விட்டு பிரித்து ஆறுதலாய் கேட்க,
“எல்லாரும் சொன்ன மாதிரி நான் தகுதியானவ இல்லத்தா...”
“ஹே..! தமிழு முடிஞ்சதை எதுக்கு நினைக்கிற..? இங்கே பாரேன் நானும் எங்க கல்யாணம் முடிஞ்சி வரும் போது இப்படி தான். உன்னை மாதிரி பட்டிக்காடு எதுக்கெடுத்தாலும் அழுதுக்கிட்டே இருப்பேன். உன் மாமா சிடுமூஞ்சி மாதிரி கத்திக்கிட்டே தான் இருப்பாரு. இந்த வீடு எப்படி போக போக மாறுச்சோ அதே மாதிரி நானும் மாறுனேன். என்ன உனக்கு வயசு கம்மி அதுவுமில்லாம தாத்தா வளர்ப்புல வெளிஉலகம் தெரியாம வளர்ந்துட்டே. சரியாகிரும்மா. இது உன் வீடு யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. தீபன் ஏதாவது கோவமா திட்டுனா கண்டுக்காம ஒதுங்கி போயிரும்...” என்று இன்னும் ஏதேதோ அறிவுரைகள் வழங்கியவாறு கூந்தலை பின்னலிட்டு கீழே அழைத்து வந்தார்.
‘தன் மகளுக்கு இவளை சுத்தமாக பிடிக்காது. நிச்சியம் இவளிடம் காரணமேயில்லாமல் சண்டையிடுவான். அதற்கு இவள் பதிலுக்கு கத்தாமல் விலகி விட்டால் இவளுக்கு நல்லது அவனுக்கும் நல்லது. காலப்போக்கில் திருமண உறவு புரிந்து விடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வார்கள்...’ என்றே எண்ணிய மங்களம் அப்படியே அறிவுரையும் கூறி உண்ண வைத்திருந்தார்.
ESTÁS LEYENDO
அன்றில் அவனோ
Romanceஎன்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..? Ebook link: https://www.amazon.in/dp/B0BLP4RTRZ Full audio novel playlist: https://youtube.com/playlist?list=PLOdd6U7eksBgoZyOfs0qiEzzanS7irbSa
