💞 அன்றில் அவன் 28 💞

127 8 1
                                        

அத்தியாயம் 28 

பள்ளி கடைசி வருடம் படிக்கும் எதிர் வீட்டாரின் மகள் மட்டும் ஹாலில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்க, உள்ளே வருபவளை கண்டதும் அவளும் வரவேற்றாள்.

“வாங்க அக்கா..! உங்களை அடிக்கடி நான் பார்த்திருக்கேன். ஆனா நீங்க எப்பவும் பிஸி தான். உங்களை மாதிரியே நான் இருக்கணும் எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. சிம்பிளி கியூட்டா இருக்கீங்க...”

“தேங்க்ஸ்டா. உன்னோட நேம் என்ன..?”

“வர்ஷினி...”

“நைஸ் நேம்...” என்று இருவரும் அதன் பின் படிப்பு, வேலை என்று நேரம் போக பேசிக் கொண்டிருக்க, தனலட்சுமி வந்து காபீ கொடுக்க வாங்கிக் கொண்டாள்.

அதன் பின் அவருமே மங்களத்திடம் பேசுவது போல் சகஜமாக நேரம் செல்வதே தெரியாது பேச அப்போது தான் அத்தை இவர்களிடம் பொழுது போக்கிற்க்கு பேசுவது புரிந்தது.

அவர்களிடம் பேசியதில் ஒன்று புரிந்தது. தங்களின் கடந்த கால வாழ்க்கை எதுவும் தெரியாது என்று. அவர்கள் இந்த வீட்டுக்கு குடிபெயர்ந்து மூன்று வருடங்கள் தான் ஆகிறது. தானும் தீபனும் கணவன், மனைவி. வெளிநாட்டில் வேலை பார்த்தவன் இப்போது இங்கே வந்து வேலை பார்க்கிறான்.

“பணம், சம்பாத்தியம், வேலை எல்லாம் முக்கியம் தான். ஆனா குழைந்தை குட்டியும் முக்கியம் தானேம்மா. உன் அத்தை அதை நினைச்சி தான் கவலைப்படுது. சீக்கிரம் குழைந்தை பெத்துக்கோங்க தள்ளி போடாதீங்க. அதான் உன் மாமியார் இருக்காங்கல அது குழைந்தையை பார்த்துக்கும்...” அறிவுரையாய் கூற, மௌனமோடு கேட்டுக் கொண்டாள்.

பேச பேச எரிச்சல் உள்ளுக்குள் ஒரு வெறுப்பு அனைவரின் மீது. ‘எப்போடா வருவே..?’ தீபனின் மீது கடுங்கோவம். இவரின் வாயினை அடக்க வேண்டுமென்றால் தான் பேச வேண்டுமென புரிந்தது.

இப்போது அவரை பேசவிடாது அவள் பேசிக் கொண்ட இருக்க காரின் ஓசைக் கேட்டது.

 அன்றில் அவனோ Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ