மௌனமாய் கோவிலுக்கு செல்லாமல் அப்படியே வீடு வந்து சேர்ந்தனர் அனைவரும்.
வீட்டுக்குள் நுழைந்த அடுத்தநொடி, “என்னம்மா தமிழு புசுக்குன்னு இப்படி பண்ணிட்டே..? உன் உயிரை நினைச்சு பார்த்தியாம்மா...” கவலையோடு மங்களம் கேட்க,
“அத்தை..! கவலைப்படாதீங்க. எனக்கு ஒன்னுமாகது. புவனிதா அக்கா உங்களுக்கு ஒன்னுமில்லை தானே..? ஆர் யூ அல்ரைட்...?”
“பைன்..சாரி தமிழ். என்னோட மிஸ்டேக் தான் எல்லாமே. நான் கொஞ்சம் சுதாரிச்சிருக்கணும்...”
“இட்ஸ் ஓகே அக்கா. நோ ப்ராபளம் இனி இதை பத்தி நினைக்காதீங்க. நீங்களும் தான் சரியா..? சொல்லப் போனா அவனால நம்மல ஒன்னும் பண்ண முடியாதுன்னு நான் அப்பவே புரிஞ்சிக்கிட்டேன். ஏன்னா அவன் கிட்ட கத்தி மாதிரி எந்த ஆயுதமும் இல்லை. அவனோட நோக்கம் பார்வை எல்லாமே உன் செயின் மேல மட்டும் தான்....”
“இருந்தாலும் நீ மட்டும் பார்க்கலைன்னா...”
“முடிஞ்சதை எதுக்கு நினைக்கணும் விடுங்க. அத்தை நைட் டிப்பன் ரெடி பண்ணுங்க குட்டிஸ்க்கு. நான் இவங்களுக்கு ஏதாவது விளையாட்டு காட்டிட்டு இருக்கேன். பயந்து போயிட்டாங்க என் பட்டு செல்லம்ஸ்...” கூறியவாறு நிலனை தன் கரங்களில் தூக்கிக் கொண்டு மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.
“இங்கே பாருங்கம்மா..! இனி வெளியே போறதா இருந்தா ஜாக்கிரதையா போங்க சரியா...” கூறிய திருத்தனியும் சென்று விட, மகள்கள் இருவரும் மட்டுமே ஹாலில் அமர்ந்தனர்.
“ஒரு நிமிஷம் அந்த பரசேதி பக்கத்துல வரவும் பயந்து போயிட்டேன் தேஜா...”
“எனக்குமே அந்த நிமிஷம் என்ன பண்ணனுமே தெரியல. நல்ல வேலை இவ சுதாரிச்சிட்டா பரவாயில்லை இவளுக்கு நம்ம தைரியம் ரொம்ப தான் என்ன ஒரு துணிச்சல் பார்த்தியா..? இந்த வீட்டுக்கு முதல் முதல்லா வரும் போது எப்படி இருந்தா பார்த்தியா புவனி..? இப்போ எப்படி மாறிட்டா...”
ВЫ ЧИТАЕТЕ
அன்றில் அவனோ
Любовные романыஎன்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..? Ebook link: https://www.amazon.in/dp/B0BLP4RTRZ Full audio novel playlist: https://youtube.com/playlist?list=PLOdd6U7eksBgoZyOfs0qiEzzanS7irbSa
