💕 அன்றில் அவன் 3 💕

161 9 2
                                        

அத்தியாயம் : 3 

மதிய உணவருந்தும் நேரம் கேண்டீனில் அமர்ந்து சாப்பிட மனமில்லாமல் யோசித்துக் கொண்டிருந்தாள் தமிழினி.

“உனக்கு கொஞ்சமாவது மத்தவங்க கிட்ட எப்படி நடந்துக்கிடணும் தெரியுதா..? உன் முகத்தை பார்த்த எரிச்சலா இருக்கு. ஒழுங்கா ட்ரெஸ் பண்ண தெரியல. படிப்பு இல்லை. அறிவுமில்லை. என் முன்னாடி நிக்காதே பொய் தொலை...” என்று தன்னை திட்டியவனின் குரல் இன்றும் செவியில் ஒலிப்பது போன்று இருந்தது.

“இங்கே பாரும்மா இது தான் இனி உன் குடும்பம். இவங்க எல்லாரையும் நான் உன்னை பார்த்த மாதிரி நீ பார்த்துக்கணும் சரியா..?” என குரல் தளர்ந்த குரலும் அதனோடு சேர்ந்து ஒலித்தது.

நெற்றியில் கை வைத்து வருடியவாறு இருக்க, “என்ன தமிழினி  சாப்பிடாம உட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க..?” கேட்டவாறு முன்னே வந்து அமர்ந்தான் வசந்த்.

“வாங்க வசந்த்...”

“நானும் பார்க்கிறேன் இன்னைக்கு நீங்க சரியில்லையே..?”

“பர்சனல்...”

“சரி ஓகே. பெர்மிசன் கேட்டு போக வேண்டியது தானே..? எனக்குத் தெரிஞ்சி நம்ம டீம்ல லீவ் போடாத ஒரு ஆள் நீங்க தான்...”

“எனக்கு இங்கே இருக்கிறது தான் பிடிச்சிருக்கு...”

“ஓவர் சின்னியர் உடம்புக்கு ஆகாதுங்கோ...”

“கிண்டல் பண்ணாதீங்க வசந்த். எதுக்காக வந்தீங்க..?”

“இங்கே எதுக்கு வர்றது சாப்பிட தான். நீங்க கொண்டு வரல போலையே..? உங்களுக்கு ஆடர் போடட்டா...”

“வேண்டாம் வேண்டாம். எனக்கு பசியில்லை. நீங்க சாப்பிடுங்க நான் கேபின் போறேன்...” கூறிவிட்டு எழ,

“தமிழினி ஒரு நிமிஷம்....”

“சொல்லுங்க வசந்த்...?”

 அன்றில் அவனோ Место, где живут истории. Откройте их для себя