♥️ அன்றில் அவன் 4 ♥️

151 10 1
                                        

அத்தியாயம் : 4

திருத்தனி மங்களம் தம்பதியருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூத்தவள் தேஜா அடுத்தவள் புவனிதா. மகனோ தீபன். செல்வ செழிப்பாய் வளர்ந்த குடும்பம் தான். பிள்ளைகளின் செழிப்பு வளர வளர மாற்றம் கொள்ள வைத்தது. மகள் இருவரும் திருமணம் முடிந்து விட்ட பொழுதில் மருமகளாய் விதியின் விளையாட்டின் அடியெடுத்து வைத்தாள் தமிழினி. பெற்ற பிள்ளைகளே பாசத்தையும், குணங்களையும் மறக்க அன்றிலிருந்து இன்று வரை இவர்களோடு இருப்பது இவள் மட்டுமே..!

கோவம் கொண்டு அதிகமாக அவர்களை வருந்தும் படி பேசி விட்டோமோ நினைத்த தமிழினியின் மனம் தாங்கவில்லை. அதை விட நெருப்பாய் கொதித்தது பழைய நினைவுகள். கண்ணாடியின் முன் சென்று தன்னைக் கண்டவளுக்கோ அனலாய் அவன் வீசிச் சென்ற வார்த்தைகள் தான்.

இன்பமாய் பட்டாம்பூச்சியாய் பொழுதினை கழித்த தன் வாழ்க்கைக்குள் அவன் நுழைந்த நினைவுகளுக்கு மனமோ மறுக்கச் சென்றது.

"தமிழு..! தமிழு...!" தன் பேத்தியை அழைத்தவாறு பரமமூர்த்தி அப்புச்சி வயலுக்குள் நடந்து வந்துக் கொண்டிருந்தார்.

"பள்ளிக்கூடம் முடிஞ்சா போதுமே பிள்ளைகளோட எங்கையாவது சுத்த போயிறது தமிழு..! அம்மாடி..." அழைத்தவாறு தளர்ந்த நடையோடு வர,

அவரின் குரல் செவியில் விழுந்த நேரம், "அச்அச்சோ..! தாத்தா வர்றாரே..!" புலம்பிய தமிழினி தண்ணீர் நிறைந்த தொட்டிக்குள்ளே மூழ்கினாள்.

மோட்டாரில் இருந்து தண்ணீர் வந்து விழும் அந்த நீண்ட தொட்டியில் சிறுமிகள், அவள் வயது பருவப் பெண்கள் கண்டவாறு சிரித்துக் கொண்டனர் அவளின் செயலை.

தூரத்தில் இருந்து அவர்களை கண்டுக் கொண்டவரோ, "ஏ புள்ளைகளா..! என் பேத்தி வந்தாளா..? அவளை பார்த்தீங்களா..?" கத்திக் கேட்க,

நீருக்குள் இருந்து மெல்ல தலையை மட்டும் அந்த பெண்களிடம் நீட்டி, "சொல்லாதே..!" என்பது போல் சைகை செய்தாள்.

 அன்றில் அவனோ Opowieści tętniące życiem. Odkryj je teraz