அலை 2...💐
மாலை வெயில் மங்கி மெல்ல இருள் சூழ துவங்கிய இரவு நேரம். நட்சத்திர கூட்டத்திற்கு இணையாக கண்களை பறிக்கும் வண்ணம் வர்ணங்களை அள்ளி தெளிக்கும் மின்சார விளக்குகளின் உதவியால்
அந்த திருமண மண்டபமே சொர்கலோகமாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது. சற்று பெரிய இடத்து திருமண வரவேற்பு என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே காணப்பட்டது…மலர்ந்து மணம் வீசூம் பூக்களை வண்டினங்கள் மொய்ப்பதைபோல அழகிய தேவதைகளின் பிரதி பிம்பங்களாக வலம் வரும் பூவையர்களை கண்களால் மொய்த்துக்கொண்டு இருந்தனர் இளம் காளையர்கள்.
ஆங்காங்கே திருமண வரவேற்பிற்கே உரித்தான பரபரப்புக்களுக்கு பஞ்சமில்லாமல் இருந்தாலும் விருந்தினர்கள் கவனமெல்லாம் மணமக்கள் வரப்போகும் அந்த தருணத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்தது.
அப்போதுதான் மண்டபத்திற்குள் நுழைந்திருந்தது கார்த்திக்கின் கார். முக்கிய வேலைகள் மலைப்போல குவிந்து இருந்தாலும்
தங்கை கேட்டுக்கொண்டதற்கு இணங்க சுஜாவை அழைத்துக்கெண்டு ரிஷப்ஷனிற்கு வந்திருந்தான் கார்த்திக்.சுஜா பர்பில் நிற லெஹங்காவில் அப்சரசாய் நடந்து வர சாம்பல் நிற பார்மல் ஷர்ட்டும் இளம் சந்தன நிற டெனீம் ஜீன்ஸ் பேண்டில் நெடுநெடுவென உயரத்தில் மண்டபத்திற்குள் நுழைந்த கார்த்திக்கின் மேல் தான் அங்கிருந்த பாதிபேரின் கண்களும் நிலைத்திருந்தது….
தன் தோள்பட்டை உயரத்தை விட இறக்கமாக இருந்த தங்கையின் பக்கம் சற்றே குனிந்தவன் "ஏ வாலு... வந்தோமா, கொஞ்ச நேரம் இருந்தோமா கிப்ட் கொடுத்துட்டு சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பினோமான்னு இருக்கனும்... உன் வானர கூட்டம் வந்ததுன்னு உட்காந்து வெட்டியா வம்பு அளந்துகிட்டு இருந்த அப்புறம் எல்லாத்துக்கும் சுத்தல்ல விடுவேன் பாத்து நடந்துக்க" என்று சிறு குரலில் மிரட்டலாக தங்கைக்கு எச்சரிக்கை செய்தவன் அருகில் இருந்த இருக்கையில் போனும் கையுமாக அமர்ந்துக்கொண்டான்.
YOU ARE READING
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...
Romanceஇது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்