ஹாய் மக்களே...ரொம்ப கோவமா இருப்பிங்க... தெரியும் சாரி சொல்ல மாட்டேன்... இதுவரை இப்படி எழுதியது இல்லை அதான் கொஞ்சம் நேரம் எடுத்துடுச்சி... இந்த எபிக்கு இது தேவையான ஒன்னு அதான் எழுதி இருக்கேன்... அவ்வளவு விரசமா இருக்காது அப்படி இருந்ததுன்னு நினைச்சா சாரி ஸ்கிப் பண்ணிடுங்க... தெய்வங்களா பாத்து பண்ணுங்க... உங்க கருத்துக்களையும் சொல்லுங்க... நன்றி அன்புடன் பாகி...
.........
இரும்பு கம்பிகளுக்கு பின் நின்றிருந்த கஜேந்திரனின் (கஜா) கண்கள் கோபத்துடன் குமாரை ஏறிட்டது.
“சாரை கூப்பிட்டு அனுப்பினா தான் வருவிங்களோ… ஊர்ல ஆள் இல்லன்னதும் ஆளாளுக்கு ஜபரு காட்டிக்கினு திரியுறிங்களா…” இத்தனை நாட்களாக தன்னை வந்து பார்க்காத குமாரை காய்ச்சி எடுத்தான் கஜா.
கஜாவின் கண்களில் தெரிந்த வெறியில், மனதில் கிலி உண்டானாலும், அதை முகத்தில் காட்டாது நின்றிருந்த குமார்,
“அண்ணாத்தே நீ வுட்டுட்டுப் போன வேலையை எல்லாம் ராத்திரி பகல் பாக்காம பாத்துக்குனு இருந்தேன்…. என்னை போய் இப்படி சொல்லிட்டியே… நம்ம நினைச்சது எதுவும் நடக்கல அண்ணாத்தே… அதான் உன்னை வந்து பாக்க முடியல…”
முகத்தில் டன் கணக்கில் வருத்தம் இழையோட, கஜாவிடம் கூறினான் அவன்.
“என்னடா சொல்ற…? சொல்ற பரதேசி ஒழுங்கா சொல்லி தொலையேன்டா…?” சொல்ல வந்த தகவல்களை சரியாக கூறாததில் வல்லென குமாரின் மீது எறிந்து விழுந்தான் கஜா, அவனுக்கு வெளியிடத்தில் இருந்து வரவேண்டிய வரவுகள் வேறு நிறைய இருந்ததில் கொஞ்சம் கடுப்பாகி விட்டான்.
கஜாவின் முகத்தில் தெரிந்த குரூரத்தில் பயந்தவன் சற்று திணறலுடனே,
“அண்ணாத்தே..., அது வந்து… அது… அந்த கார்த்திக் பைய ரேவதி குட்டிய வுட்டுட்டு போய்டுவான்னு அவனை லேசா நினைச்சி அசால்டா இருந்துட்டேன்…
ஆனா… அவன் வூட்டு ஆளுங்கள கூட்டியாந்து அந்த குட்டிய ஊர் அறிய கூட்டிக்கின்னு போவான்னு எதிர்பார்க்கவே இல்ல அண்ணாத்தே….” என்றான் தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்டு,
YOU ARE READING
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...
Romanceஇது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்