கணவனை பற்றிய இனிமையான நினைவுகளில் மூழ்கி இருந்தவளை கலைத்தது சுவர் கடிகாரம்... அதில் தன்னிலை மீண்டு வந்தவளுக்கு அவன் வார்த்தைகள் வலியைத் தர, பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி கீழே இறங்கி சென்றாள்.
.......
"இந்த கடையில பாக்கலாம் சிவா... ஓரளவு கலெக்ஷன்ஸ் நல்லாவே இருக்கும்..." சிவாவை அழைத்துக் கொண்டு ஒரு பெரிய ஜவுளிகடைக்குள் நுழைந்தாள் திவ்யா.
"என்ன பாக்கலாம் சிவா...?" ஜவுளிக்கடையை சுற்றி பார்த்துக்கொண்டே அவனை கேட்டாள்.
*முதல்ல புடவை பாக்கலாம் திவிக்கா அப்புறம் சுடி பாக்கலாம்..." இவன் யோசனை கூற,
"என்னடா உங்க அக்காவுக்கு பர்த்டே சர்பிரைஸ் பெருசா இருக்கும் போலவே....?!?" அவனை பார்த்து சிரித்துக் கொண்டே கண்கள் விரிய கேட்டாள்.
"ஆமா திவிக்கா... முதல்லனா வீட்டு நிலமையெல்லாம் யோசிச்சி எனக்கு எதுக்கு இவ்வளவு விலையில்னு திட்டி ரொம்ப கம்மி விலையில் அக்கா எடுத்துக்கும்... ஆனா இப்போ நான் சேர்த்து வைச்ச காசுல அக்காவுக்கு எடுக்க போறேன்..." ஆசையாக அங்கிருந்தவற்றைப் பார்த்தான் சிவா.
"எனக்கும் உன்னைப் போல ஒரு தம்பி இருந்திருந்தா நல்லா இருந்து இருக்கும் டா..." அவன் தலையை வருடி பெருமையாக சொல்ல,
"அப்போ நான் உன் தம்பி இல்லையா அக்கா...?" என்றான் சிவா சிறு ஆதங்கத்தோடு,,
அவனைப் பார்த்து அதிர்ந்தவள் "அய்யோ டேய் நீயும் உன் அக்கா மாதிரியே குதர்க்கமாக பேசாதடா... நான் ஒரு பேச்சிக்கு சொன்னேன்... நீ தான் என் தம்பி உன் அக்கா கல்யாணத்துல முன்ன நின்னு என்ன செய்தியோ அது எல்லாம் எனக்கும் செய்யனும் புரியுதா..." என்றாள் மலர்ந்த முகத்தோடு...
"கண்டிப்பா திவிக்கா... நான் செய்யாம வேற யாரு செய்வா...?!?" பேசிய படியே புடவை எடுக்கும் பகுதிக்கு வந்துவிட்டார்கள்...
"உங்க அக்காவுக்கு இந்த கலர் தான் பிடிக்கும்னு அவ குறிப்பா எதுவும் போட்டு நான் பாக்கலையே டா எப்படி எடுக்கறது...?" அவள் எல்லாவற்றையும் கடைபரப்பி விழித்து நிற்க,
YOU ARE READING
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...
Romanceஇது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்