உருக்கிய பொன்னாய் ஜொலித்த ஆதவனின் தங்கநிற ஓளிக்கிற்றுக்கள் பூமியில் தன் பிரகாசத்தை இன்று அளவுக்கு அதிகமாகவே அள்ளி இரைத்திருந்தது.
வீட்டில் கமகமத்த சாம்பிராணியின் வாசம் ஒரு தெய்வீக சூழலை உருவாக்கி இருந்ததென்றால், தோட்டத்தில் மலர்ந்து மணம் வீசும் பூக்கள் இறைவனடி சேர்ந்து அதன் சுகந்தத்தை நாசிகளில் நிரப்பி புத்துணர்வை அளித்துக் கொண்டிருந்தது. அந்த இதமான காலை வேளையில் உணவை மேஜையில் அடுக்கியபடி இருந்தார் கல்யாணி.
"கிளையண்ட் மீட்டிங் அரேஞ் பண்ணு ரகு… நாம சொல்றதுதான் கடைசி… கார்த்திக்கிட்ட நான் பேசிக்கிறேன்… மெட்டிரியல் வந்ததும் வேலைய ஆரம்பிச்சி இருக்கனும் இல்லையா? அப்புறம் ஏன் இவ்வளவு லேட் இஞ்சகனியர்கிட்ட பேசு… சொன்ன தேதிக்கு பில்டிங் ஒர்க் முடிஞ்சாகனும்…" தன் பிஏ விடம் காரசாரமாக போனில் பேசியபடி அறையில் இருந்து உணவு கூடத்திற்கு வந்து கொண்டிருந்தார் தேவராஜ்.
வயது ஐம்பத்து ஐந்தை தாண்டி கூடுதலாக சில வருடங்கள் கடந்திருந்தாலும் அவருயைய நிஜ வயதை வெளியே கூறினால் கூட .. "சும்மா விளையாடாதிங்க சார்…உங்க உண்மையான வயசை சொல்லுங்க எங்களை ஏமாத்தாதிங்க" என்று கூறுவர் அப்படி கட்டுக்கோப்பாய் உடம்பை வைத்திருந்தார் தேவராஜ்..
கணவர் வரும் அரவம் கேட்கவும் அவரை புன்னகையுடன் ஏறிட்ட கல்யாணி கணவர் போனில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து தன் அதிருப்தியை முகத்தில் காட்ட ஒரு நிமிடம் என மனைவியிடம் சைகை செய்தவர்,
"ஓகே ரகு நீ கிளையன்ட் கிட்ட எல்லாம் அப்பாண்ட்மெண்ட் வாங்கிக்க நான் வந்து பாத்துக்குறேன்.. குறிச்ச தேதிக்கு பில்டிங் வேலை முடியனும்... " பேசிக்கொண்டிருந்த போனை அனைத்து விட்டு நாற்காலியில் அமர்ந்தார்.
ஒரு நிர்வாகத்தையே அடக்கி ஆண்டாலும், அவர் கட்டளைக்கு காத்திருக்கும் பலர் இருந்தாலும், கட்டிய மனைவியின் அன்புக்கும் காதலுக்கும் என்றும் அடங்கியவர் தானே... தன்னை பார்க்காமல் மௌனமாக பறிமாறிய படி இருந்த கல்யாணியின் முகத்தையே பார்த்த தேவராஜ். "கல்யாணி " என அழைத்தார்
YOU ARE READING
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...
Romanceஇது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்