வெள்ளை நிற தேவதையின் நடனத்தில் தன்னை மறந்து நின்றவனை, அருகிலிருந்த ரகுவின் குரல் அசைத்திட, அதில் தெளிந்தவன்,
"எக்ஸ்கீயூஸ் மீ..." என தன்னை சுற்றியிருந்த நண்பர்கள் கூட்டத்திலிருந்து தனியே வந்தான்.
கார்த்திக்கை தொடர்ந்து ரகுவும் அவன் பின்னே வர
"ரகு ரேவதி இங்க எப்படி...?" என்றான் கார்த்திக். சற்றே கடுகடுத்த குரலில்.
"அது தெரியல சார் நானும் இப்போ தான் பாக்குறேன்... ப்ரோகிராம் இருக்குன்னு மார்னிங் சொல்லி இருந்தாங்க.... அது இங்க தான் போல"
அவனும் யோசனையுடன் கார்த்திக்கிடம் கூறிக் கொண்டிருந்தான்.
தொழில் முறையில் நண்பர்களாக இருந்த ஒருவரின் இல்ல விழாவிற்கு தான் தவிர்க்க முடியாமல் கார்த்திக் வர உடன் ரகுவையும் அழைத்து வந்திருந்தான்.
"சரி நாம கிளம்பலாம்..." ரகுவிடம் கூறியவன் அங்கிருந்து செல்ல பார்க்க,
"சார் சார் இப்போதான் ஃபங்கஷனே ஸ்டார்ட் ஆகி இருக்கு... அதுக்குள்ள எப்படி கிளம்பறது..." என்றான் அவசரமாக,
அங்கிருந்து பாதியில் செல்ல முடியாமல் நின்றிருந்தவனுக்கு, என்ன முயன்றும் ரேவதியை நோக்கி செல்லும் பார்வையை தடுக்க வழி அறியாது திண்டாடினான்....
அவள் நடன அசைவுகளில் கொண்ட நளினமும், முகத்தில் காட்டிய பாவனைகளும், கைகள் செய்த ஜாலத்திலும் விழிகளை எடுக்க முடியாமல் கட்டுன்றி இருந்தது கார்த்திகின் மனம் ...
அவள் மேல் கோவம் தான், மூர்கத்தனமா கோவம், தன்னை கண்டு கொள்ளவில்லையே என்ற கோவம், தன்னை புரிந்துக்கொள்ளாமல் தவறாய் கொள்கிறாளே, என்பதில் உண்டான கோவம், இந்த கோபங்கள் எல்லாம் இப்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதே... திறமை மிக்க பெண் மனதோடு சொல்லிக்கொண்டான். அதிகம் ஒப்பனை காணத முகம் பெயருக்கென உதட்டுசாயமும் மீன் விழிகளுக்கு மையெழுதியும் வைத்திருந்தாள் பார்க்க பார்க்க தெவிட்டாத முகம்.
YOU ARE READING
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...
Romanceஇது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்