எத்தனை பெரிய வார்த்தைகளை கேட்டு விட்டான்... ரேவதியின் மனம் ஆறவேயில்லை... உயிரை கொல்லாமல் கொன்று விட்டது அவனது வார்த்தைகள்.
கார்த்திக்கின் முன் அழுது விடாமல் கோபத்துடன் வெளியே வந்தவளுக்கு அவன் பேசிய வார்த்தைகளை ஜீரணிக்கவே முடியவில்லை...
ராகவ் காதலை சொல்லிய தருணத்தை நினைத்து பார்த்தாள்... கோபமாக வந்தது... அவன் ஆசைக்கு என் வாழ்க்கையை கெடுத்து விட்டானே என அவன் மீது அளவுக்கடந்த ஆத்திரம் தான் உண்டானது....
அவன் காதல் சொல்லிய நாளில் இருந்து அவள் மனதில் குழப்பம் மட்டும் தானே இருந்தது. அந்த காதலுக்கான ஆசையோ தவிப்போ ஒன்று கூட அவளிடம் இருந்தது இல்லையே ... முதலில் அவனை மனதார காதலனாக ஏற்றக் கொண்டாளா என்பதே சந்தேகம் தான்... அவன் திருமணம் செய்து கொண்டான் என்று அறிந்ததும் அதிர்ந்து போனாளே தவிர உடைந்து போகவில்லையே...
அவன் அடிப்பட்டு மருத்துவமனையில் இருக்க போய் தானே இத்தனையும் இழுத்துக் கொண்டது...
முட்டாளாக அவன் காதலுக்கு பச்சைகொடி காட்டி இன்று இந்த நிலைமையில் நின்றுக் கொண்டு இருக்கிறாளே... அதுவும் கார்த்திக் கேட்டதும் தன்னிறக்கத்தில் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்தது
தன்னையும் மீறி அழுகை வர, அழுகையை கட்டுப்படுத்தியவள், வாயைப் பொத்திக்கொண்டு ஓய்வறைக்கு சென்று விட்டாள்.
இவை அனைத்தையும் சிசிடிவியின் வாயிலாக பார்த்துக்கொண்டு தான் இருந்தான் கார்த்திக்.
அவனுக்கும் வருத்தம் தான்... வலிக்கும் என்று தெரிந்துதான் கேட்டான்... இல்லையென்றால் இவன் வழிக்கு வரும் ரகமா அவள்...
நீ இடம் போனால் நான் வலம் போகிறேன் என இழுத்து சென்று முட்டுச் சந்தில் நிறுத்தி விடுவாளே...
இவளிடம் சமரசமாக பேசினாள் ஒற்றை மன்னிப்பால் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் செய்து விட்டு, மீண்டும் உனக்கும் எனக்கும் எதுவுமில்லை என்ற பாட்டை படிப்பதற்கு இந்த அதிர்ச்சி வைத்தியம் தான் சரி என்று பட்டது.
JE LEEST
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...
Romantiekஇது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்