🌊அலை 1🌊

2.8K 17 4
                                    

அலை 1💐

சென்னையில் காலை எட்டு மணிக்கே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகத்தான் இருந்தது. அதுசரி அந்த சூரியனுக்கு என்ன கோவமோ காலையிலேயே தன் உக்கிரத்தை கூட்டி விட்டார் போல வெயில் நெருப்பாய் தகிக்க ஆரம்பித்திருந்தது..

மேல்தட்டு வர்க்கம் சற்று அதிகம் வசிக்கும் முக்கிய வீதிதனில், சரவணபொய்கை என்ற பெயரை தாங்கி கம்பிரத்துடனும், கலைநயத்துடனும், காட்சியளித்த அந்த மாளிகையில், காற்றில் கமழ்ந்த சாம்பிராணியின் வாசம் அந்த வீட்டையே நிறைத்து கமகமத்தது.

பூஜையறையில் சுடர்விட்டு ஓளி வீசிக்கொண்டிருந்த தீபங்களின் மத்தியில் வள்ளி தெய்வனையுடன் தம்பதி சமேதரராய் காட்சியளித்த முருக பெருமானின் திரு உருவ படத்திற்கு தோட்டத்தில் பறித்த பூக்களை மாலையாக தொடுத்து அணிவித்து, தன் மெல்லிய குரலில்

" கந்தா சரணம்... கந்தா சரணம்...

சரவணபவ குகா சரணம்... சரணம்..."

என்று கந்த குரு கவசப்பாடலை பாடிக்கொண்டிருந்தார் நித்யகல்யாணி.

அந்த வீட்டின் ஆணிவேர் இவர் தான். கணவர் பிள்ளைகள் மட்டுமல்லாது வீட்டில் கடைநிலை ஊழியர் வரை இவரின் சொல்லுக்கு மறுசொல் இல்லை எனலாம்.... அப்படி எல்லோரையும் தன் வசம் வைத்துள்ள பாசமான பெண்மணி. கலையான முகம், கனிவான பார்வை, புன்னகை சிந்தும் இதழ்கள், என்று எப்போதும் லட்சுமி கடாக்ஷ்மாய் இருப்பவர். மகளின் அரவம் கேட்கவும் வெளியே எட்டி பார்த்தார் கல்யாணி. கையில் காபி கப்புடன் அப்போதுதான் ஹாலில் வந்து அமர்ந்திருப்பாள் போல ,இளைய மகள்.

சுவாமி படங்களுக்கு முன்னே வணங்கிவிட்டு நெற்றியில் பூசிய குங்குமம் திருநீருடன் வெளியே வந்தவர், மகளின் தலைமுடி துவட்டாமல் ஈரமாக இருப்பதை பார்த்துவிட்டு "என்ன சுஜி இது தலைகுளிச்சிட்டு அப்படியே வந்து உட்காந்து இருக்க? இங்க வா..." என்று மகளை அழைத்து பக்கத்தில் இருத்தி கொண்டவர், அங்கே வேலை செய்யும் பெண்மணியிடம் துண்டை எடுத்து வர சொல்ல அவள் எடுத்து வந்து கொடுத்ததும் மகளுக்கு தலையை துடைத்து விட்டுக் கொண்டிருந்தார்.

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...Onde histórias criam vida. Descubra agora