டிரைவரின் உபயத்தில் சீரான வேகத்தில் இருளை கிழித்துக் கொண்டு தார் சாலையில் பயணித்தது கார்த்திக்கின் வாகனம்.
அவன் கையில் ட்ரிப்ஸ் ஏற்றியதிற்கான அடையாளம் இருக்க, மற்றொரு கரத்தை பற்றியபடி கார்த்திக்கின் அருகில் அமர்ந்திருந்தாள் சுஜாதா.
அவள் எதிர்பார்க்காத தருணத்தில் எதிர்ப்பார்க்காத சம்பவங்கள் நிகழ்ந்து விட்டதில், அவள் கண்கள் அப்பட்டமான ஏமாற்றத்தையும் சோகத்தையும் தாங்கி இருந்தது.
இது தான் நிதர்சனம் என மூளை உணர்த்தி இருந்தாலும், ஆசை கொண்ட மனது அந்த சம்பவத்தை ஏற்க மறுத்திட, ஜன்னலில் தெரியும் இருளை வெறித்து பார்த்தாள்.ஆசையாசையாய் மனதில் ஒரு கோட்டையை கட்டி வைத்திருக்க,. அது சீட்டு கட்டு சரிவது போன்று மடமடவென சரிந்து விழுந்ததில் மன வருத்தத்துடன் இருந்த சுஜியின் கவனத்தை, தன் பக்கம் திருப்பியது கையில் இருந்த அலைபேசி. எடுத்து பார்க்க கல்யாணி தான் அழைத்திருந்தார்.
"அம்மா…"
"எங்க இருக்கிங்க சுஜி மா? அண்ணன் இப்போ எப்படி இருக்கான்…? எப்போ வீட்டுக்கு வருவீங்க…?" என்றவருக்கு அங்கு இப்பே கொள்ளவில்லை ட்ரிப்ஸ் ஏற்றும் அளவிற்கு மகனின் உடல் நிலை சென்றதில் ஒரு தாயாய் மனது தவித்திட,
"வந்துட்டே இருக்கோம் மா.. இன்னும் பத்து பதினைந்து நிமிஷத்துல வீட்டுக்கே வந்துடுவோம்…அதான்
டாக்டரே பயப்பட ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டாரு அப்புறம் ஏன் மா பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை கால் பண்ணி கேட்டுக்கிட்டே இருக்கிங்க…. நீங்க நம்பலைன்னா இதோ அண்ணா என் பக்கத்துல தான் உட்காந்துட்டு கண்ணை மூடி இருக்கான்… பேசிறிங்களா… " கண் மூடி இருக்கையில் சாய்ந்திருந்தவனை ஒரு பார்வை பார்த்து விட்டு கல்யாணிடம் தன் மொத்த கடுப்பையும் இறக்கி இருந்தாள் சுஜாதா."சரி சரி கோவிச்சிக்காத டி… அவன் உடம்பு காய்ச்சல் தாங்காது அலண்டு போயிடும்… அதான் ஒன்னுக்கு ரெண்டு முறை கேட்டேன் கார்த்திக்கு மட்டும் இல்லை உனக்கு ஒன்னுன்னாலும் இப்படி தான் துடிப்பேன்… ரொம்ப வாய் ஆடாம வந்து சேரு" சிறு அதட்டல் தொணியிலே உரைத்தவர் மகனுக்கு கஞ்சியை காய்ச்ச சென்று விட்டார்.
YOU ARE READING
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...
Romanceஇது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்