அலை 🌊 27

362 15 8
                                    

அலை 🌊 27

சுயநினைவின்றி இருக்கும் ரேவதியின் நிலையை கண்டு  கார்த்திக்கின் மனம்  பதற்றம் கொள்ள, பாவையின் கன்னத்தை தட்டி, அவளை  எழுப்ப முயன்று கொண்டிருந்தான்  . ஆனால் அவள் எழும் வழியை தான் காணோம்…  

நேரம் கூடக்கூட மயக்கம் தெளியாமல் வாடிய கொடிபோல் துவண்டிருந்த பெண்ணவளை மார்போடு அணைத்திருந்தவனின் கண்கள் தண்ணீர்  இருக்கிறதா என  தவிப்போடு சுற்றும்  முற்றும் தேடியது.

சற்று தூரத்தில் தண்ணீர் குடுவை இருப்பதை கண்டு அவனது  விழிகள் பிரகாசமாகி விட, தன் மார்மீது பஞ்சு பொதியென கண் மூடி  கிடந்தவளை கீழே கிடத்தியவன் அவசர அவசரமாக தண்ணீரை கொண்டு வந்து அவள் முகத்தில் தெளித்து அவளை எழுப்பிட முனைந்தான்...

“ரதிமா… ரதி எந்திரிடி ஏன்டி இப்படி பயப்படுத்துற. எவ்வளவு தைரியமா என்கிட்ட சண்டை போட்டு பேசுவ…  எங்கடி போச்சி உன் தைரியம் எல்லாம்… முழிச்சி பாரு… என்னை பாரு… ஏய்…” 

பலவாறாக குரலில் வலியை தேக்கி அழைத்த போதும் கோபத்துடன் கத்திய போதும் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாது அசைவற்று கிடந்தாள் ரேவதி. 

“டேய் அந்த  குட்டி என்னடா பண்ணுறா… எழுந்துட போறா…?” வெளியே கூட்டத்தில் நின்றிருந்த ஒருவன் எச்சரிக்கை செய்தான்.

“இப்போதைக்கு அந்த குட்டி எழுந்துக்காது அண்ணே …  மினிமம் ஒரு ரெண்டு மணி நேரம் மயக்கத்துல தான் இருக்கும்… அவ்வளவு டோஸ்  கொடுத்து இருக்கேன்… ” அவன் குருட்டு தைரியத்தை கொடுத்து சரக்கை தொண்டையில் சரித்திருந்தான்., 

“இருந்தாலும் அந்த குட்டிய தனியா விட்டுட்டு இங்க நாம நிக்குறது அண்ணனுக்கு தெரிஞ்சா அதுக்கும் சத்தம் போடும்… அண்ண வர்ற நேரம் ஆச்சி  வாங்க அங்க  போவோம்…”

கூட்டத்தை கலைத்தவர்கள் ரேவதியை கிடத்தி வைத்திருந்த கதவை திறக்க போக, அங்கே ரேவதி இல்லை….

“டேய் அந்த குட்டி காணும் டா…” பதறியவன் மற்றவர்களை பார்த்து  கத்தியபடியே அறைக்குள் புகுந்து தன் தேடலை தொடங்கி இருந்தான்.

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...Where stories live. Discover now